தருமபுரம் ஆதீனத்தின் 26-வது குருமகா சன்னிதானத்தின் உடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப் பட்டது.
குருஞானசம்பந்தரால் தோற்று விக்கப்பட்ட நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தரும புரம் ஆதீனத்தின் 26-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த டிச.2-ம் தேதி மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட நிலையில் நினைவு திரும்பாம லேயே நேற்று முன்தினம் (டிச.4) மதியம் முக்தி அடைந்தார். அவரது உடல் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்கு கொண்டு வரப்பட்டு பக்தர்கள் இறுதி மரியாதை செலுத் துவதற்காக வைக்கப்பட்டது. அங்கு நேற்று முன்தினமும், நேற்றும் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமார சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாசம் சுவாமிகள், ரத்தின கிரி ஆதீனம் பாலமுருகன் அடியார் சுவாமிகள், நாகை மாவட்ட ஆட்சி யர் பிரவீன் பி.நாயர், தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நேற்று மாலை இறுதிச் சடங்கு நடைபெற்றது. சன்னிதானத்தின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மேலகுருமூர்த்தம் என்ற இடத்தில் மாலை 6 மணிக்கு மேல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திரளான தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களும், பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.
தற்போது இளைய சன்னிதான மாக உள்ள ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வரும் 13-ம் தேதி 27-வது ஆதீன மாக பொறுப்பேற்க உள்ளார்.
மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் சுவாமிகள் செய்தியாளர் களிடம் கூறியபோது, “தருமை ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னி தானமாக பட்டம் ஏற்க உள்ள ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனத்தில் ஐந்தரை ஆண்டு காலம் செயலாளராகவும், உதவியாள ராகவும் பணியாற்றி உள்ளார். எல்லா துறைகளையும் குறித்து அறிந்தவர். இவர் தருமை ஆதீ னத்தை நல்ல முறையில் வழி நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
முதல்வர் இரங்கல்
சுவாமிகள் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமறை பயிற்சியும், தமிழில் வித்வான் பட்டமும் பெற்ற வர். இவர் சென்னையில் உள்ள ஆதீன பிரச்சார நிலையத்தின் பொறுப்பை ஏற்று, சமய மாநாடுகள், சொற்பொழிவுகள் முதலியவற்றை சிறப்புற நடத்தியவர். இவர் 48 ஆண்டுகள் சமயப்பணி, திருப்பணி, கல்விப்பணி மற்றும் சமூகப்பணிகள் பலவற்றிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அவரை இழந்து வாடும் சிஷ்யர்களுக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா கயிலைநாதர் திருவடி நிழ லில் இளைப்பாற பிரார்த்திக் கிறேன்” என கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago