சூடான் நாட்டில் ஏற்பட்ட தீ விபத் தில் இறந்த தனது கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டுமென அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மானடிக்குப்பம் கிராமத் தைச் சேர்ந்தவர் முருகன் மகன் ராஜசேகர்(36). இவருக்கு கலை சுந்தரி என்ற மனைவியும், ஷிவானி (4) என்ற மகளும் உள்ளனர். ராஜ சேகர் கடந்த 2017-ல் வேலைக்காக சூடான் நாட்டுக்குச் சென்றார். அங்கு செராமிக் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
வீடியோவில் பேசியபோது தீ
கடந்த 3-ம் தேதி மாலை அவர் தனது மனைவி கலைசுந்தரியுடன் செல்போன் வீடியோ அழைப்பில் பேசினார். ராஜசேகருக்கு பின்புற பகுதியில் தீ எரிவது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த கலை சுந்தரி அதுகுறித்து கணவரிடம் கேட்டுள்ளார். பேசி கொண்டிருக் கும்போது, திடீரென செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ராஜசேகரை மீண்டும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.
இதுகுறித்து கலைசுந்தரி, தனது உறவினர்களிடம் தெரிவித் தார். அவர்கள் இந்திய தூதர கத்தை தொடர்பு கொண்டு பேசி னர். அப்போது சூடான் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 இந்தியர்கள் இறந்தது தெரியவந்தது. அதில் ராஜசேகர் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் இறந்ததும் தெரிய வந்தது.
இதனால் சோகமடைந்த கலை சுந்தரி தனது உறவினர்களுடன் கடலூர் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். இறந்த தனது கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரவேண்டும். தனது மகளின் கல்விச் செலவை அரசு ஏற்கவேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago