திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் திருடப்பட்டு, ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட இருந்த ஐம்பொன் சிலை கேரளாவில் மீட்கப்பட்டது. பெண் உட்பட 4 பேர் கைது செய் யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்புபெற்ற பன்னிரு சிவாலயங் களில் ஒன்றான திக்குறிச்சி மகா தேவர் கோயிலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி கருவறை பூட்டை உடைத்து கொள்ளை நடை பெற்றது.
திருவிதாங்கூர் மன்னர் காலத்தைச் சேர்ந்த மகாதேவர் உற்சவ மூர்த்தியின் ஐம்பொன் சிலை மற்றும் வெள்ளி, தாமிரத் தாலான திருமுகங்கள், நந்தி சிலை, திருவாசி மற்றும் காணிக்கை பணம் உள்ளிட்டவை கொள்ளை போயின.
தரிசனம் செய்ய வரும் பக்தர் கள் போல் கோயிலுக்குள் மர்ம கும்பல் புகுந்து நோட்டமிட்டு, கொள்ளையில் ஈடுபட்டதும், ஐம்பொன்சிலையுடன் கேரளா வுக்கு தப்பிச் சென்றதும் தெரிய வந்தது.
கன்னியாகுமரி எஸ்பி நாத் உத்தரவின் பேரில், உதவி ஆய் வாளர் விஜயன் தலைமையிலான தனிப்படை போலீஸார், கேரள மாநிலம் திருவல்லம் பகுதியில் விசாரணை நடத்தினர். அங்குள்ள வீடு ஒன்றில் மகாதேவர் ஐம்பொன் சிலை மற்றும் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தேங்காய்பட்டினத்தைச் சேர்ந்த ஷாநவாஸ், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த உசேன், சுமிதா, சதீஷ் பாபு ஆகிய 4 பேரை போலீ ஸார் கைது செய்தனர். இக்கும் பல் ஆஸ்திரேலியாவுக்கு கடத்து வதற்காக வைத்திருந்த மகாதேவர் ஐம்பொன் சிலை மற்றும் சில பொருட்கள் மீட்கப்பட்டன. எஞ்சிய பொருட்களை மீட்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வரு கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago