வேளாண் பொருள் சந்தைப்படுத்துதல் குழுவின் சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் நீட்டிப்பு

வேளாண் உற்பத்திப் பொருட் களை சந்தைப்படுத்துதல் குழுவை நிர்வகிக்கும் சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேளாண் உற்பத் திப் பொருட்களை சந்தைப்படுத்து வதற்காக மாவட்ட வாரியாக புதிய சந்தைப்படுத்துதல் குழுவை அரசு அமைத்துள்ளது. இதற்கான புதிய உறுப்பினர்கள் நியமிப்பதற்கு முன், அக்குழுவை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஏற்கெனவே நியமிக் கப்பட்ட சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் கடந்த நவ. 29-ம் தேதியுடன் நிறைவடைந்தது. புதிய சந்தைப்படுத்தும் குழுவில் உறுப்பினர்களை நியமிக்க கால அவகாசம் தேவைப்படுவதால், சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங் களுக்கு நீட்டிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப் பட்டு, அதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE