மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
தென்மேற்கு அரபிக்கடல் மற் றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண் டலம் தீவிர புயலாக மாற வாய்ப் புள்ளது. இதனால் விசைப்படகு களை உடனடியாக அருகில் உள்ள கடற்கரைப் பகுதிகளுக்கு திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேண்டுகோள்
இதற்கிடையே, சுமார் 50 விசைப் படகுகள், 650 மீனவர்களுடன் 250 முதல் 270 கடல்மைல் தொலை வில் மீன்பிடித்துக் கொண்டிருப் பதாகவும், அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அவர்களை உடனடியாக பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் கோவா, மும்பை, கொச்சி இந்திய கப்பல் படை மற்றும் இந்திய கடலோர காவல் படையின ரிடம் குளச்சல் மீன்துறை உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, இந்திய கடலோர காவல்படையின் கப்பல்கள், மீன்பிடி படகுகள் இருக்கும் இடத் துக்குச் சென்று ஆபத்தில் இருந்த 22 விசைப்படகுகளில் இருந்து 220 மீனவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
அரசு மேற்கொண்ட துரித நட வடிக்கையால் புயல் பாதையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆழ் கடல் விசைப்படகு மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்ப வழி வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது ஆழ்கடலில் உள்ள படகு களையும் மீட்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago