ஒரே இரவில் 17 பேரின் உயிரை பறித்த காம்பவுண்டு சுவர்: கதறித் துடிக்கும் மேட்டுப்பாளையம் மக்கள்

By செய்திப்பிரிவு

கோவை

ஏழைக் கூலித் தொழிலாளிகளின் குடும்பத்தைச் சேர்ந்த 17 பேரின் உயிரைப் பறித்தது ஒரு காம்பவுண்டு சுவர். "இந்த சுவரை அகற்றுமாறு பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். தற்போது 17 பேரின் இறப்புக் காரணமாகிவிட்டது இந்த சுவர்" என்று கூறி கதறித் துடிக்கின்றனர் மேட்டுப்பாளையம் பகுதி மக்கள்.

மேட்டுப்பாளையம் நடூரில் ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவர் 4 வீடுகள் மீது இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இடிந்த வீடுகளுக்கு மிக அருகில் வசிக்கும் ராமசாமி (70) `இந்து தமிழ்' செய்தி யாளரிடம் கூறும்போது, "அதி காலையில் பலத்த சப்தம் கேட்டது. இடி சப்தம் என்று இருந்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது, அதிக அளவில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. பின்னால் உள்ள வீடுகளில் விசாரிக்கலாம் என்று பார்க்கப் போனேன். அப்போது அந்த வீடுகள் எல்லாம் இடிந்து கிடந் ததைப் பார்த்து பதைபதைத்துப் போனேன். கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை வரவழைத்து, இடிந்து விழுந்த வீடுகளில் சிக்கி யிருந்தவர்களை மீட்க முயன்றோம். ஆனால், எல்லோருமே இறந்துவிட் டது பின்னர்தான் தெரியவந்தது" என்றார்.

அதே பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன், மூர்த்தி, செந்தில் ஆகியோர் கூறும்போது, "ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த காம்பவுண்டு சுவர் கட்டும்போது, எதிர்ப்புத் தெரிவித்தோம். அதை அகற்றுமாறு பலமுறை வலியுறுத் தினோம். அதிகாரிகளிடமும்கூட புகார் செய்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கடைசியில் 17 பேருக்கு எம னாக மாறிவிட்டது அந்த காம்ப வுண்டு சுவர். காம்பவுண்டு சுவர் அமைந்துள்ள வீட்டுக்கு சொந்தக் காரர் மேட்டுப்பாளையத்தில் பெரிய ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். அவரது செல்வாக்குக்கு முன், கூலி வேலை செய்யும் ஏழைத் தொழிலாளர்களின் கோரிக்கை எடுபடவில்லை" என்றனர்.

Caption

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலர் என். செல்வராஜ் கூறும்போது, "கடும் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், தொழிலதிபரின் பங்களாவின் சுற் றுச்சுவர் வலுவிழந்து காணப்பட் டதைக் கண்டறிந்து, சீரமைத்திருந் தால் 17 பேரைக் காப்பாற்றியிருக் கலாம்.

கடுமையாக உழைக்கும் கட்டு மானத் தொழிலாளர்கள் மழை காரணமாக வீட்டுக்குள் முடங்கி யிருந்த நிலையில், கருங் கற்களால் ஆன, கோட்டை போன்ற சுவர் திடீ ரென சரிந்து விழுந்து, அங் கிருந்தவர்களை புதைத்து விட்டது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீட்டை அறிவித்த தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். தொழிலதிபரின் கவனக் குறைவின் காரணமாக இந்த விபத்து நடைபெற்றதால், உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவருக் கும் தலா ரூ.20 லட்சத்தை, அவர் களது உறவினர்களிடம் விபத்துக்கு காரணமான தொழிலதிபர் வழங்க வேண்டும். சேதமடைந்த வீடுகளுக் குப் பதிலாக, புதிய கான்கிரீட் வீடுகளை மாவட்ட நிர்வாகம் கட்டிக் கொடுக்க வேண்டும்" என்றார்.

கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், "விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Caption

தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் கூறும்போது, "தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு அருகில், தீண்டாமை சுவர் போல அமைக்கப்பட்டுள்ள காம்பவுண்டு சுவரை அகற்ற வேண்டுமென பல முறை வலியுறுத்தியும், சுவரை அகற்றவில்லை. உரிய கட்டுமானம் இல்லாமலும், பலமில்லாத அஸ்தி வாரத்துடனும் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் இடிந்து, ஏழை மக்கள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இப்பகுதியில் உள்ள சேதமடைந்த வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகளைக் கட்டித்தர வேண்டும்" என்றார்.

அருகில் உள்ள அண்ணா நகர் பகுதி மக்கள் கூறும்போது, "இப்பகுதியில் மழை நீரும், சாக்கடைக் கழிவுநீரும் செல்ல கால்வாய்களே கிடையாது. சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் குறைவுதான். மழைக் காலங்களில் குடியிருப்புகளைச் சுற்றிலும் அதிக அளவில் தண்ணீர் தேங்கும். நேற்றுகூட ஒரு வீட்டை தண்ணீர் சூழ்ந்து கொண்டதால், அங்கிருந்தவர்கள் ஜன்னல் வழியாக குதித்து வெளியேறி தப்பினர். நகராட்சி அதிகாரிகள் இப்பகுதிக்கு வருவதேயில்லை. இப்போது 17 பேர் இறந்த பின்னர் தான், அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் இங்கு வருகின்றனர். இங்கு தண்ணீர் செல்லும் நீர்வரத்து பாதைகள் மற்றும் பள்ளத்தை தூர் வாரி, தடுப்பணைகள் கட்டி, மழை நீரும், கழிவுநீரும் உரிய முறையில் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

Caption

விபத்து நேரிட்ட வீடுகளில் ஒன் றில் வசித்து வந்த அருக்காணியின் உறவினர் திலகவதி (48). இவருக்கு கணவர் ஈஸ்வரன், சந்திரலேகா, சுகாசினி என்ற இரு மகள்கள், மணிகண்டன் என்ற மகன் ஆகியோர் உள்ளனர். நேற்று முன்தினம் அருக்காணி வீட்டுக்கு வந்த திலகவதி, நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

பின்னர் மழை பெய்யத் தொடங்கிவிட்டதால், அருக்காணி யின் வீட்டிலேயே தங்கிக் கொண்டார். விபத்தில் அருக்காணியுடன், திலகவதியும் உடல் நசுங்கி உயிரிழந்தார். தாயை இழந்த பிள்ளைகள் மூவரும் கதறித் துடித்தது அங்கிருந்தோரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்