தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்கிறது

By செய்திப்பிரிவு

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட் டங்களில் பெய்த தொடர் மழை யால், அங்குள்ள பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர் இருப்பு 4 டிஎம்சி-யை தாண்டியது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் ஏரிகளின் நீர் இருப்பு 4 டிஎம்சி-யை (4 ஆயிரம் மில்லியன் கன அடி) தாண்டியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, பூண்டி ஏரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் 73 மிமீ மழை பெய்ததால், ஏரிக்கு விநாடிக்கு 2,925 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில், 1,229 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

சோழவரம் ஏரிப் பகுதியில் 98 மிமீ மழை பெய்துள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 440 கனஅடி தண்ணீர் வருகிறது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் 131 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

புழல் ஏரிப் பகுதியில் 82 மிமீ மழை பெய்தது. ஏரிக்கு விநாடிக்கு 2,161 கனஅடி தண்ணீர் வருகிறது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் 1,818 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் பிடிப்புப் பகுதிகளில் 93 மிமீ மழை பதிவானது. ஏரிக்கு விநாடிக்கு 1,923 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் 1,913 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்த 4 ஏரிகளின் மொத்த கொள் ளளவு 11,257 மில்லியன் கனஅடி. தற்போது 4,091 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரி களில் நீர் இருப்பு கணிசமாக அதி கரித்திருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்