4 நாட்களாக தொடர் மழையால் வீராணம் ஏரி நிரம்பியது

By செய்திப்பிரிவு

கனமழை காரணமாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி வேக மாக நிரம்பி வருகிறது. பாதுகாப்பு கருதி ஏரியின் வடிகால் மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள 47.50 அடியுள்ள வீரா ணம் ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 586 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது.சென்னை குடிநீருக்கும் இங்கிருந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான காட்டுமன்னார்கோவில், பாப்பாக் குடி, முஷ்ணம், ஜெயங்கொண் டம், அரியலூர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஏரிக்கு செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை மற்றும் பல்வேறு காட்டாறுகள் மூலம் அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து முழு கொள் ளளவை அடையும் நிலையை எட் டியுள்ளது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 47.30 அடி உள்ளது. கிட்டத் தட்ட ஏரி நிரம்பியதாக கருத்தில் கொள்ளப்படுகிறது. கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 300 கன தண்ணீரும், ஓடைகள் மற்றும் காட்டாறுகள் மூலம் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி மழை தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிக்கு வரும் மழை தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியின் பிரதான வடிகால் மதகான வெள்ளியங்கால் ஓடை மதகு வழியாக விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீரும், விஎன்எஸ்எஸ் வடிகால் மதகு வழியாக விநாடிக்கு 2,500 கன தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. சென்னைக்கு விநாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்