தென்காசி மாவட்டத்தில் பரவலாக விடிய விடிய மழை பெய்தது. இதனால், 4 அணைகள் முழு கொள்ளளவில் உள்ளன. குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் நேற்று காலை வரை மாவட்டத்தில் பரவலாக மழை விட்டு விட்டு பெய்தது. காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கருப்பாநதி அணையில் 46 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம் வருமாறு:
கடனாநதி அணை- 35, தென்காசி- 30.30, ராமநதி அணை- 25, அடவிநயினார் கோவில் அணை- 26, ஆய்க்குடி- 24.40, சிவகிரி- 19, குண்டாறு அணை- 22, செங்கோட்டை- 16, சங்கரன்கோவில்- 5.
இன்று பகலிலும் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. பலத்த மழையால் மாவட்டத்தில் உள்ள 5 அணைகளில் கடனாநதி அணை, கருப்பாநதி அணை, குண்டாறு அணை, அடவிநயினார் கோவில் அணை ஆகிய 4 அணைகள் நிரம்பியுள்ளன. 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் 84 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 534 கனஅடி நீர் வந்தது. அணை பாதுகாப்பு கருதி 620 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் 80.50 அடியாக இருந்தது.
கருப்பாநதி அணைக்கு வரும் 300 கனஅடி நீர், குண்டாறு அணைக்கு வரும் 25 கனஅடி நீர், அடவிநயினார் கோவில் அணைக்கு வரும் 70 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.
பலத்த மழையால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், இந்த அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago