சென்னையில் அனைத்து கட்டி டங்களுக்கும் கழிவுநீர் இணைப்பு வழங்கப்படும். அதற்கான கட்ட ணத்தை 5 ஆண்டுகளில் 10 தவ ணையாக செலுத்தலாம். இத்திட்டம் டிசம்பர் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் ரூ.486 கோடி செலவில் செயல் படும் மூன்றாம் நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல் வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
கோயம்பேடு மற்றும் கொடுங் கையூர் பகுதிகளில் தலா 45 மில்லி யன் லிட்டர் திறன் கொண்ட 3-ம் நிலை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க கடந்த 2012-13, 2014-15 நிதியாண்டுகளில் அப்போதையை முதல்வர் ஜெயலலிதா அறி விப்பு வெளியிட்டிருந்தார்.
அத்திட்டத்தின் முதற்கட்டமாக இந்தியாவிலேயே மிகப்பெரிய 3-ம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கடந்த அக்டோபர் 1-ம் தேதி கொடுங்கையூரில் நான் தொடங்கிவைத்தேன். அதன் மூலம் வடசென்னை, மணலியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக் கப்பட்ட நீர் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கோயம் பேட்டில் ரூ.486 கோடி திட்ட மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று திறந்துவைக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் வட சென்னை மற்றும் பெரும்புதூ ரில் உள்ள தொழிற்சாலை களுக்கு தேவையான, தற்போது தினமும் வழங்கப்பட்டு வரும் 40 மில்லியன் லிட்டர் நன் னீருக்கு பதிலாக சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கப்பட உள்ளது.
கோயம்பேடு மற்றும் கொடுங்கையூர் நிலையங்களில் மாநகரில் மொத்தமாக உருவாகும் கழிவுநீரில் 20 சதவீதம் அளவுக்கு மறுசுழற்சி செய்யப்படும். இதன் மூலம் நாட்டிலேயே அதிகபட்சமாக கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் மாநிலமாக தமிழகம் திகழும்.
மொத்தத்தில் நதிநீர், கழிவுநீர், குடிநீர் என அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டது அதிமுக அரசு தான். இந்த அரசின் 3-ம் ஆண்டு சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் 30 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் சென்னை யில் உள்ள தரை தளம் மற்றும் 2 தளங்கள் வரையுள்ள கட்டிடங்களுக்கு, 044 45674567 என்ற எண்ணை தொடர்புகொண்டோ, இணையதளம் வாயிலாகவோ பதிவு செய்தவுடன், எந்தவித ஆவணங்களும் இன்றி, எளிய முறையில் கழிவுநீர் இணைப்பு வழங்கப்படும்.
இல்லந்தோறும் இணைப்பு
இத்திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதிகளில் புதியதாக அமைக் கப்பட்டுள்ள பாதாள சாக்கடை கட்டமைப்புகளுடன், கழிவுநீர் இல்லாத வீடுகளுக்கு, சென்னை குடிநீர் வாரியமே தாமாக கழிவுநீர் இணைப்பு வழங்கும்.
இந்த இரு திட்டங்களிலும் கழிவுநீர் இணைப்பு கொடுத்த பின்பு, சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய கழிவுநீர் கட்ட ணத் தொகையை ஒரே தவணை யிலோ அல்லது 5 ஆண்டுகளுக்குள் 10 தவணைகளாகவோ, வரி மற்றும் குடிநீர் கட்டணத்துடன் செலுத்தலாம். இத்திட்டம் வரும் டிச. 2-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
அதைத்தொடர்ந்து புதிய சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் நேரில் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மேந்தர் சிங், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.என்.ஹரிஹரன், செயல் இயக்குநர் டி.பிரபுசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago