உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் அதிமுக, திமுக கண்ணாமூச்சி ஆட்டம்: மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் கடந்த 3 ஆண்டுகளாக கண்ணா மூச்சி ஆட்டம் நடத்துவதாக மக்கள் நீதி மய்யம் குற்றம்சாட்டி உள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த 2016-ல் நடந்திருக்க வேண்டிய உள் ளாட்சி தேர்தல் இன்றுவரை நடத்தப்படவில்லை. இதனால், அடிப்படை வசதிகளில் ஏற்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டவும், கோரிக்கை வைக்கவும் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல் லாமல் மக்கள் தவிக்கின்றனர்.

சுயநலத்துக்காக..

இந்த நிலையில், ஆளும் கட்சியும் ஆள்வதற்கு ஆலாய் பறக்கும் கட்சியும், இதுபற்றிய எந்த கவலையும் இல்லாமல் தங்கள் சுயநலத்துக்காக உள் ளாட்சி தேர்தல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

கடந்த 3 ஆண்டுகளாக, தேர்தல் நடத்தப்போவதாக அரசு அறிவிப்பதும், அதில் குறை இருப்பதாக எதிர்க்கட்சி நீதிமன்றம் செல்வதுமாக ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நடந்துகொண்டு இருக் கிறது.

பாவனை காட்டுகின்றனர்

ஒருபுறம் தேர்தல் நடத்தப் படுவதாக பாவனை காட்டி, தனது கட்சிக்காரர்களிடம் விருப்ப மனு பெறுவதும், மறுபுறம் தேர்தலுக்கு தடை போட மனுவோடு நீதிமன்ற வாசலில் நிற்பதுமாக இருக்கின்றனர். இதுவரை மக்களை மட்டுமே ஏமாற்றிவந்த இவர்கள் இப்போது தங்கள் கட்சிக்காரர்களையும் ஏமாற்றத் துணிந்துவிட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது.

வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக மக்கள் இவர்களை அடையாளம் கண்டு புறக்கணிப்பதுதான் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கும், உண்மையான மக்களாட்சி உருவாவதற்கும் வழியமைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE