புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

அமமுகவில் மூத்த நிர்வாகியாக இருந்தவர் வா.புகழேந்தி. டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சமீபத்தில் அக் கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: அதிமுகவில் கர்நாடக மாநிலச் செயலாளராகவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறை வுக்குப் பிறகு, செய்தி தொடர் பாளராகவும் பதவி வகித்தேன். இந்த நிலையில், அமமுகவை டிடிவி தினகரன் தொடங்கினார். அப்போது அதிமுகவில் இருந்த பலரும் அவரை ஆதரித்தோம்.

பின்னர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அமமுகவை பதிவு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார். ஆனால், அதற்கு முன்பு கட்சிக்கென தனியாக விதிகளை அவர் வகுக்கவில்லை. பொதுக் குழுவையும் கூட்டவில்லை. இதை அப்போதே எதிர்த்தேன்.

அமமுகவை பதிவு செய்யக் கோரி நான் உள்ளிட்ட 100 பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தோம். இந்நிலையில், தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அமமுகவில் இருந்து விலகிவிட்டேன். இதேபோல முன்னாள் அமைச்சர்கள் இசக்கி சுப்பையா, இன்பத்தமிழன், கே.டி.பச்சமால், முன்னாள் எம்.பி.க்கள் தங்க தமிழ்செல்வன், சிவசாமி மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 14 பேர் தற்போது அமமுகவில் இல்லை.

ஒரு கட்சியை பதிவு செய்ய 100 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளில் உள்ளது. ஆனால், இந்த 100 பேரில் பிரமாணப் பத்திரம் அளித்த நான் உள் ளிட்ட 15 பேர் தற்போது அந்த கட்சியிலேயே இல்லை. எனவே, இதுதொடர்பாக தினகரன் அளித்த விண்ணப்பத்தை நிரா கரிக்குமாறு தேர்தல் ஆணை யத்துக்கு மனு அளித்தேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.

பொதுக்குழுவைக் கூட்டி நிர்வாகிகளை தேர்வு செய் யாமல், தனக்குத் தானே பொதுச் செயலாளர் என தினகரன் பிரகடனம் செய்துகொண்டார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்ட மீறலாகும்.

தற்போது உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து அமமுகவை பதிவு செய்ய பல்வேறு வகையில் தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

எனவே, இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் கடந்த அக்டோபர் 23-ம் தேதி அளித்த ஆட்சேபங்களை கருத்தில் கொள்ளாமல், அமமுகவை பதிவு செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அதற்கு இடைக்காலத் தடையும் விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசா ரணைக்கு வரவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE