பராமரிப்பு இல்லாத நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் 

முறையாக பராமரிக்கப்படாத நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை வரையிலான பகுதி சரியாக பராமரிக்கப்பட வில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்தச் சாலை சீரமைக்கப்படும் வரை 50 சதவீத சுங்கக் கட்டணம் மட்டும்தான் வசூலிக்க வேண் டும் என்று ஏன் ஆணையிடக் கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி களின் இந்த ஆதங்கம் மிகவும் நியாயமானது. இதன்மூலம் அச்சாலையைப் பயன்படுத்து வோரின் உள்ளக் குமுறல் களை நீதிபதிகள் எதிரொலித் துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 43 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவை அனைத்திலும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், நெடுஞ்சாலைகளைப் பராமரிப்பது இல்லை.

இந்திய தேசிய நெடுஞ் சாலைகள் ஆணைய விதிகளின் படி சுங்கக் கட்டணத்தில் 40 சதவீதம் பராமரிப்புக்காக செல விடப்பட வேண்டும். ஆனால், சுங்கக் கட்டணம் வசூலிக்கும் எந்த நிறுவனமும் அதில் 4 சதவீதத்தைக்கூட பராமரிப் புக்காக செலவிடுவதில்லை என்பதுதான் உண்மை.

இதை விடக் கொடுமை என்னவென் றால், பல தேசிய நெடுஞ்சாலை களில், அவற்றை அமைக்க செலவிடப்பட்ட தொகை முழுமையாக வசூலிக்கப்பட்ட பிறகும், சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படாமல் வசூலிக்கப் பட்டு வருகிறது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட சுரண்டல் மையங்களாக சுங்கச்சாவடி கள் திகழ்கின்றன.

இதை உணர்ந்து சரியாக பராமரிக்கப்படாத சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். அதேபோல், முதலீடு முழுமையாக எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப் பட்டு, பராமரிப்புக்காக மட்டும் 40 சதவீத கட்டணம் வசூலிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE