நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான சென்னை மாணவரின் தந்தை ரவிக்குமாரிடம் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக சென்னை கோபாலபுரம் ரவிக்குமார், அவரது மகன் ரிஷிகாந்த் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நீட் தேர்வு மையத்தில் பதிவான மாணவனின் கைரேகையை ஒப்பிட்டு அறிக்கை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இம்மனு நீதிபதி ஜி ஆர் சுவாமிநா தன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மாணவனின் கைரேகையும், நீட் தேர்வின்போது பதிவான கை ரேகையும் ஒத்துபோகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ரவிகுமார் சிபிசிஐடி போலீஸார் முன்பு இன்று (நவ.29) காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி ஆள்மாறாட்ட வழக்கில் தனக்குத் தெரிந்த உண்மைகளைத் தெரிவிக்க வேண் டும் என்று கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதனையடுத்து மாணவர் ரிஷிகாந்தின் தந்தை ரவிக்குமார் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது மாணவரின் தந்தை ரவிக்குமாரிடம் நீட் நுழைவுச்சீட்டில் இருந்த புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதிலிருந்தது தனது மகனின் பழைய புகைப்படம் என்று கூறியதாகத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago