கடலூரில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து விபத்து: ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு

By என்.முருகவேல்

கடலூரில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூரை அடுத்த கம்மியம்பேட்டையில் ரயில் தண்டவாளத்தை ஒட்டி உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் குடும்பத்தினருடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார் நாராயணன்.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக கனமழை விட்டு விட்டு பெய்துவந்தது. நேற்று (நவ.28) இரவு வழக்கம் போல தூங்கிக் கொண்டிருக்கையில், திடீரென பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் தூங்கிக் கொண்டிருந்த நாராயணன் மனைவி மாலா (40), மகள் மகேஸ்வரி (21), ஒன்றரை வயது பேத்தி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் நாராயணன், அவரது மருமகன் வேல்முருகன், மகள் ரஞ்சிதா ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாராயணன், வேல்முருகன், ரஞ்சிதா ஆகியோரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்