திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட புதிய மாவட்டங்களுக்கு துணை ஆட்சியர்கள் நியமனம்

By செய்திப்பிரிவு

புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட் டங்களுக்கு துணை ஆட்சியர் நிலையில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக வருவாய்த் துறை செயலர் வெளியிட்ட அறி விப்பு: திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் முன்னாள் மாவட்ட மேலாளர் ந.விஸ்வநாதன், திருப்பத்தூர் மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியராகவும், கோவை வடக்கு டாஸ்மாக் முன் னாள் மேலாளர் ஆர்.சந்திரசேகர் ராணிப்பேட்டை மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியராக, மதுரை தெற்கு டாஸ்மாக் முன்னாள் மாவட்ட மேலாளர் எஸ்.சரவ ணன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்புதூர் வட்ட வரு வாய் கோட்டாட்சியராக எல்காட் மனிதவளப் பிரிவு பொது மேலாளர் திவ்யயும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

அதேபோல், வேலூர் மாவட் டத்தில் உள்ள குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியராக கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அ.வே.சுரேந்தி ரன், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வருவாய் கோட் டாட்சியராக கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் கே.வி.ராஜ் குமாரும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளராக திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியர் ஆர்.வில்சன் ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இப் பணியிடங்கள் அனைத்தும் மாவட்டங்கள் பிரிப்பு மற்றும் புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்ட பின் புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களாகும்.

இதுதவிர, மேலும் 15 துணை ஆட்சியர்கள் பல்வேறு காலிப் பணியிடங்கள் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்ட இடங்களில் பணி யமர்த்தப்பட்டுள்ளனர்.மேலும் 15 துணை ஆட்சியர்கள் பல்வேறு காலிப் பணியிடங்கள் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்ட இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்