நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் தனது மனைவியுடன் சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் நேற்று ஆஜராகி குற்றப் பத்திரிகை நகலை பெற்றுக்கொண் டார்.
சென்னை கிண்டியில் உள்ள தொழி லாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏவும், முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றியுள்ளதாக பார்த்திபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
காஞ்சனாவும் ஆஜர்
இந்நிலையில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, மா.சுப்பிர மணியன் தனது மனைவி காஞ்சனாவுடன் குற்றவியல் நடுவர் ராஜ்குமார் முன்பாக நேற்று ஆஜராகி, குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து குற்றச்சாட்டு பதிவுக் காக இந்த வழக்கை வரும் டிச.12-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ள குற்றவி யல் நடுவர், அன்றைய தினம் மா.சுப்பிர மணியனும் அவரது மனைவி காஞ்சனா வும் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago