சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளதால், கூடுதல் ரயில்கள் இயக்க வேண் டும் என்று பயணிகள் வலியுறுத்தி யுள்ளனர்.

சென்னை, புறநகர் பகுதியில் மக்கள்தொகை தொடர்ந்து அதி கரித்து வருகிறது. இருப்பினும், அதற்கேற்ப பொது போக்குவரத்து வசதி இல்லாததால், மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் தினமும் சுமார் 8 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். காலை, மாலை நேர நெரிசல் நேரங்களில் ரயிலில் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் செல்கின்றனர்.

எனவே, செங்கல்பட்டு, அரக் கோணம், திருவள்ளூர் போன்ற புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

புதிய பாதைகள்

இதுகுறித்து ரயில்வே அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘தாம்பரம் - செங்கல்பட்டுக்கு 3-வது பாதை மற்றும் அரக்கோணம், சூலூர்பேட்டை பகுதிகளில் புதிய பாதைகள் விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என் றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE