நன்கொடை வசூலிக்க கூடாது: நிகா்நிலை பல்கலை.க்கு கட்டணம் நிர்ணயிக்க குழு - வரைவு வழிகாட்டுதலை வெளியிட்டது யுஜிசி

நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப் பதற்கான வரைவு வழிகாட்டுதலை யுஜிசி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு:

நாடு முழுவதும் உள்ள நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணத்தை முறைப் படுத்த உச்ச நீதிமன்றம் சமீபத் தில் உத்தரவிட்டது. இதை யடுத்து அதற்கான வரைவு வழி காட்டுதல்களை யுஜிசி வெளி யிட்டுள்ளது. அதன்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகர் நிலை பல்கலைக்கழகங்களில், மாணவா்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க கல்விக் கட்டணக் குழுக்கள் அமைக்கப்பட வேண் டும்.

ஊழியர் ஊதியம்

பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் அமைக்கப்படும் கட்டணக்குழுவில் பேராசிரியர், கல்வியாளர், கணக்குப்பதிவியல் துறை வல்லுநர், அரசு இணைச் செயலா் என 4 பேர் இடம் பெறுவார்கள். மாணவர் சேர்க் கைக்கு 6 மாதங்களுக்கு முன்பு, அனைத்து பல்கலைக் கழகங்களும் தங்கள் பரிந் துரைகளை கட்டணக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண் டும். பல்கலைக்கழக ஊழியர் களின் ஊதியம், நிர்வாகச் செலவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டணம் நிர்ணயிக்கப்படும். கல்விக்கட்டணம் 3 ஆண்டுகள் அமலில் இருக்கும்.

இதுதவிர நன்கொடை உட்பட கூடுதல் கட்டணங்களை மாணவர்களிடம் பல்கலைக் கழகங்கள் வசூலிக்கக் கூடாது. மாணவர்களிடம் இருந்து பெறப்படும் கட்டணத்தை தனி வங்கிக் கணக்கில் வைத்து பராமரிக்க வேண்டும். அந்த வங்கிக் கணக்கை வைத்து கடன் பெறக்கூடாது.

அங்கீகாரம் ரத்து

இந்த நிபந்தனைகளை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம், அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதிய வரைவு வழிகாட்டுதல் மீது பொதுமக்கள், கல்வியாளர்கள் தங்களது கருத்துகளை socppi.ugc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE