மதுரை
வரதட்சணைக் கொடுமை வழக் கின் மேல்முறையீட்டில் தப்பிக்க கணவர் தரப்பில் அளிக்கப்பட்ட ரூ.9 லட்சத்தை மனநல மருத்துவ மனைக்கு ஒரு பெண் தானமாக வழங்கி உள்ளார்.
தென்காசி மாவட்டம், கடை யாலுருட்டியைச் சேர்ந்த பெண் ணுக்கும், ஜீவானந்தம் என்பவ ருக்கும் 2001-ல் திருமணம் நடை பெற்றது. திருமணத்துக்குப் பிறகு கூடுதல் வரதட்சணைக் கேட்டதாக கணவர் வீட்டார் மீது ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் அந்தப் பெண் 2004-ல் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் ஜீவானந்தம் உட்பட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கணவர், மாமனார், மாமியார் உட்பட 7 பேருக்குத் தண்டனை வழங்கியும், 2 பேரை விடுதலை செய்தும் தென்காசி நீதித்துறை நடுவர் மன்றம் 2005-ல் தீர்ப்பளித்தது. பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இந்தத் தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜீவானந்தம் உட்பட 7 பேர் நெல்லை கூடுதல் அமர்வு மற்றும் இரண்டாவது விரைவு நீதிமன்றததில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதி மன்றம் 7 பேரையும் 2010-ல் விடு தலை செய்தது. இதை எதிர்த்து அந்தப் பெண் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய் தார்.
இந்தச் சூழலில் அந்தப் பெண் ணுக்கு லேசாக மனநல பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு நெல்லை தெற்கு ரயில்வே பாலம் அருகே உள்ள ஸ்னேகா மைண்ட் கேர் சென்டரில் சிகிச்சை பெற்று குண மடைந்தார்.
இந்நிலையில், அந்தப் பெண் ணின் மேல்முறையீடு வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கணவர் தரப்பில் சமரசம் செய்து கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.
இதையடுத்து கணவர் தரப் பில் ரூ.7 லட்சம் தருவதாகக் கூறப் பட்டது. பெண்ணின் பெற்றோர் தரப்பில் ‘எங்களுக்குப் பணம் வேண்டாம், எங்கள் மகளுக்கு 45 வயதாகிறது.
அவரை இதுவரை பராமரித் தோம். இனியும் பராமரிப்போம். எங்கள் மகளுக்கு சிகிச்சை அளித்த மனநல சிகிச்சை மையத் தின் மருத்துவர் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார். இதனால் அந்த மையத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
இறுதியில் ரூ.9 லட்சம் வழங்கு வது என்றும், மேல்முறையீடு மனு வைத் திரும்பப் பெறுவது என்றும் இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டது. இதற்கு ஒப்புக் கொண்டு பெண் மற்றும் ஜீவனாந் தம் கையெழுத்திட்ட சமரச உடன் படிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பி.புக ழேந்தி முன் விசாரணைக்கு வந் தது. பெண் தரப்பில் வழக்கறிஞர் விக்டோரியா கவுரி வாதிட்டார்.
மருத்துவமனைக்கு நன்கொடை
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்த ரவு: கணவர் தரப்பில் வழங்கப்படும் ரூ.9 லட்சத்தை மனுதாரர் விரும் பியதுபோல நெல்லை ஸ்னேகா மைண்ட் கேர் சென்டருக்கு வழங்க வேண்டும்.
வரதட்சணை வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் செலுத்திய அபராதத் தொகையை ஜீவனாந் தம் திரும்பப் பெறக் கூடாது. இந்த மேல்முறையீடு மனு முடிக் கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
இதையடுத்து நெல்லை ஸ்னேகா மைண்ட் கேர் சென்டருக்கு ரூ.9 லட்சத்துக்கான காசோலை நேற்று வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago