மெரினாவில் உள்ள மீன் வியாபாரிகளை அகற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதை ஏற்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து 

By செய்திப்பிரிவு

மெரினாவில் உள்ள மீன் வியா பாரிகளை அகற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என் பதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரி வித்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர் களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரித்து தரக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டு நிலுவையில் இருந்து வரு கிறது. இந்த வழக்கு விசா ரணையின்போது சுற்றுலாத்தலமாக விளங்கும் மெரினா கடற்கரை அசுத்தமாக உள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், அந்த கடற்கரையை சுத்தம் செய்வது தொடர்பாக மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆணையர்கள் கூட் டாக ஆய்வு செய்ய வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தி இருந் தனர். அதுபோல உரிய சட்டவிதி களைப் பின்பற்றி மெரினாவில் உள்ள நடைபாதை வியாபாரிகள், கடைகள் மற்றும் இணைப்புச் சாலையில் உள்ள மீன் வியாபாரி களை ஒழுங்குபடுத்தவும் மாநக ராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என். சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது “மெரினா இணைப்பு சாலையில் உள்ள மீன் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட உள்ளது. ஆனால் உடனடியாக மீன் வியாபாரிகளை அகற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது” என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘ உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், ஏற்கெனவே உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கான சட்ட விதிகளையும் அமல்படுத்துங்கள் எனக் கூறினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என மாநகராட்சி தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. இது அதிகாரிகள் தங்களது கடமையை சரியாக செய்யவில்லை என்பதையே காட்டுகிறது. ஏற் கெனவே மெரினா கடற்கரை முழுவதும் உள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் இணைப்பு சாலையில் உள்ள நடைபாதை மீன் வியாபாரிகளை சென்னை மாநகர காவல் ஆணையருடன் இணைந்து ஒழுங்குபடுத்த வேண்டும் என இந்த நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த விஷயத்தில் மாநகராட்சி ஆணையர் தனது கடமையை செய்ய வேண்டும். இல்லையென்றால் தனது இயலா மையை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பர் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்