'என்னடா பஜ்ஜி இது' எனக் கேட்டு வடமாநிலத் தொழிலாளியைக் கிண்டலடித்த இளைஞரின் தலையில் வெட்டு விழுந்தது.
வியாசர்பாடி, எம்.ஜி.ஆர் நகரில் வசிப்பவர் ஞானமணி (33). பூக்கடையில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் டெலிவரி பாயாக பணியாற்றுகிறார். இவர் நேற்றிரவு தேதி 7.30 மணியளவில் பிராட்வே, கிருஷ்ண அய்யர் தெரு வழியாக தனது நண்பர் சீனிவாசன் என்பவருடன் நடந்து சென்றுள்ளார்.
வழியில் பஜ்ஜிக்கடை ஒன்றில் ஞானமணி பஜ்ஜி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது பஜ்ஜி விற்பனை செய்த பிஹாரைச் சேர்ந்த அருண் (23) என்ற இளைஞரைக் கிண்டல் செய்து, என்னடா பஜ்ஜி இது என திட்டியதாகக் கூறப்படுகிறது. இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பிஹார் இளைஞர் அருண் (21) திருப்பி ஞானமணியை இந்தியில் திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஞானமணி, ஆத்திரத்துடன் அருணைத் தாக்கியுள்ளார். அப்போது தாக்கப்பட்ட அருண் தான் கையில் வைத்திருந்த வெங்காயம் வெட்டும் கத்தியால் ஞானமணியைத் திருப்பி தாக்கியதில் அவருக்கு வலது பக்க தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
காயமடைந்த ஞானமணி உடனடியாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த தகவலின் பேரில் பூக்கடை போலீஸார் பிஹார் இளைஞர் அருணைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
பொதுவாக வெளி மாநிலங்களில் இருந்து முன்னர் மலையாளிகள் அதிகம் ஹோட்டல், டீக்கடைகளில் வேலை செய்து வந்தனர். அந்த மாநிலத்தில் பலரும் கல்வியில் தேர்ச்சி அடைந்ததால் தற்போது யாரும் தமிழகம் வருவதில்லை. ஆனால் பிஹார், உ.பி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் இளைஞர்கள் வேலை தேடி தமிழகம் வருகின்றனர்.
அவர்கள் உழைத்துப் பிழைக்கத்தான் வருகிறார்கள். அவர்களை கேவலப்படுத்தும் மனநிலை இன்றும் நம்முன் உள்ளது. இது தவிர்க்கப்படவேண்டும். அவர்களும் மனிதர்கள், தொழிலாளிகள் என்கிற அடிப்படையில் நடத்தப்படவேண்டும். பிஹார் இளைஞர் செய்தது குற்றச்செயல். அதற்குரிய தண்டனை அவருக்குக் கிடைக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago