தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசநல்லூரில் உள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான நேற்று கங்காவதரண மகோற்சவத்தையொட்டி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் புனித நீராடினர்.
திருவிசநல்லூரில் பல நூற்றா ண்டுகளுக்கு முன் பக்திநெறி தவறாமல் வாழ்ந்துவந்த தர அய்யாவாள், தன் தந்தை யாருக்கு நீத்தார் கடனைச் செலுத்துவதற்கான கார்த்திகை அமாவாசை நாளில் ஏற்பாடு களைச் செய்தார். இதற்காக வரவழைக்கப்பட்டிருந்த புரோகிதர் களை சம்பிரதாய சடங்குகளுக்குப் பின் முன்னோராக பாவித்து வணங்கி, அவர்களுக்கு உணவிட்ட பிறகே குடும்பத்தில் உள்ளவர்கள் பசியாற வேண்டும்.
பசியால் வந்தவருக்கு உணவு
அந்த நேரத்தில், வீட்டு வாசலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பசியால் சுருண்டு விழுந்து கிடந்ததைப் பார்த்தவுடன் சமைத்து வைத்திருந்த உணவை எடுத்துச் சென்று அவருக்கு அய்யாவாள் ஊட்டிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த புரோகிதர்கள் அய்யாவாளை சபித்ததுடன், “நீ கங்கைக்குச் சென்று நீராடி வந்தால்தான் சரியாகும்” என்றனர். கங்கைக்குச் சென்று நீராடி வர பல மாதங்கள் ஆகுமே, அதுவரை தந்தையின் பிதுர்கடன் தீராமல் அல்லவா இருக்கும், என்ன செய்வது என நினைத்து இறைவனை அய்யாவாள் வேண்டியபோது, அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் கங்கை நீர் பொங்கியது.
அவ்வாறு பொங்கிய கங்கை நீர் தெருவெங்கும் ஓடியதால் வீடுகள் அனைத்தும் நீரால் சூழப்பட்டன. மக்கள் திரண்டுவந்து கங்கையை அடக்குமாறு அய்யாவாளிடம் முறையிட அவரும் அவ்வாறே செய்தார்.
இந்த நிகழ்வு ஆண்டுதோறும் கார்த்திகை அமாவாசை தினத்தன்று கங்காவதரண மகோற்சவமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று அதிகாலை 4.30 மணி முதல் புனித நீராடல் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கங்கை பொங்கிய கிணற்று நீரில் புனித நீராடினர்.
காவிரி ஆற்றிலும் நீராடினர்
பின்னர் காவிரி ஆற்றுக்குச் சென்று அங்கும் நீராடியபின் ஈரத் துணியுடன் மடத்துக்கு வந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய தர அய்யாவாளை வழிபட்டனர்.
விழாவையொட்டி திருவிச நல்லூருக்கு நேற்று வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் 5,250 பேருக்கு மாவட்ட சித்த மருத்துவத் துறை சார்பில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
6 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago