ஊழியர்களின் கவனக்குறைவால் திருமண வாழ்க்கையை பறிகொடுத்த இளைஞருக்கு ரூ.63 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

மாநகராட்சி ஊழியர்களின் கவனக்குறைவால் திருமண வாழ்க்கையைப் பறிகொடுத்த வாலிபருக்கு ரூ. 63 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி யைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் ஆனந்தகுமார்(36). கடந்த 2009-ம் ஆண்டு மெரினா கடற்கரை காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் அருகே நடந்து சென்றபோது மின்கம்பம் சாய்ந்து பலத்த காயமடைந்தார்.

இதில் அவரின் முதுகு தண்டுவடம் பாதிப்படைந்தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தால் அவரால் நடக்க முடிய வில்லை. சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே அன்றாட பணி களை செய்ய முடியும். இதனால் தனது திருமண ஆசை பறிபோய் விட்டதாகவும், தனக்கு இழப்பீடு வழங்க மாநகராட்சிக்கு உத்தர விடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆனந்தகுமார் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பாதிக்கப்பட்ட ஆனந்தகுமாருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி ஆணையர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. மாநகராட்சி தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகா அசோக், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் எஸ்.தயாளீஸ்வரன், டி.பி.பிரபாகரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

பிரம்மச்சரியத்தை கடைபிடிப் பதா அல்லது திருமண வாழ்வை மேற்கொள்வதா என்பது ஒவ் வொருவரின் தனிப்பட்ட விருப்பம். இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய் என யாரையும் கட்டாயப் படுத்த முடியாது.

சக்கர நாற்காலியில் வாழ்க்கை

அதேநேரம் அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கியுள்ள இந்த உரிமை களையும் யாரும் தட்டிப்பறிக்க முடியாது. மாநகராட்சி ஊழியர் களின் கவனக்குறைவு காரண மாகவே மின்கம்பம் சாய்ந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால் மனுதாரர் தற்போது சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். இயற்கை உபாதையைக் கழிப்பதற்குக்கூட இன்னொருவரின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட் டுள்ளார். குறிப்பாக அவரது இல்லற கனவும் நிராசையாகிவிட்டது. இத னால் அவர் தனது திருமண வாழ்க் கையையும் பறிகொடுத்துள்ளார்.

எனவே பாதிக்கப்பட்டுள்ள ஆனந்தகுமாருக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.63.26 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகைக்கு கடந்த 2009-ம் ஆண்டு முதல் தற்போது வரை 7.5 சதவீத வட்டி வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டுத் தொகையில் ரூ.10 லட்சத்தை மட்டும் ஆனந்தகுமார் உடனடியாக எடுத்துக் கொள்ளலாம். எஞ்சியத் தொகையை நிரந்தர வைப்புக் கணக்கில் வைத்து, அதில் இருந்து வரும் வட்டியை அவருக்கு வழங்க வேண்டும். ஆனந்த குமாருக்கு ஏற்பட்டுள்ள ஊனத்தை கருத்தில் கொண்டே இந்த தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிடுகிறோம்.

மேலும் இந்தத் தொகை அவர் ஈட்டிய வருமானம் இல்லை என்பதால் இதற்கு வங்கி அதிகாரிகள் வருமானவரி கழிவு பிடித்தம் எதையும் செய்யக்கூடாது. இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக மாநகராட்சி ஆணை யர் 2020 பிப்ரவரி 24-ம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட் டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்