சேலம் வெல்லமண்டியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை: 41 டன் கலப்பட வெல்லம் பறிமுதல் 

By செய்திப்பிரிவு

வி.சீனிவாசன்

செவ்வாய்ப்பேட்டை வெல்லம் மண்டியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில், 41 டன் கலப்பட வெல்லம் விற்பனைக்கு இருந்ததைக் கண்டு பிடித்து, பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் வெல்லத்தில் ரசாயனம் கலப்படம் செய்து, விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கதிரவன் தலைமையிலான அலுவலர்கள் நேற்று காலை செவ்வாய்ப்பேட்டை, மூலப்பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள வெல்லமண்டிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஏலம் விடுவதற்காக 42 வாகனங்களில் வெல்லம் கொண்டு வரப்பட்டு அங்கு இருந்தது. இந்த வெல்லத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதிகாரிகளின் நடத்திய ஆய்வில் 23 வாகனங்களில் இருந்த வெல்லம் மொத்தமும் கலப்படம் செய்யப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.

23 வாகனங்களில் இருந்த வெல்லத்தின் மாதிரியை அதிகாரிகள் எடுத்து, கிண்டி உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வாகனத்தில் இருந்த 41 டன் வெல்லத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் கூறியது:

“சேலம் மாவட்டத்தில் வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் உடல் நலனுக்கு கேடு விளைவிக்காத வகையில் வெல்லம் தயாரிக்கவேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது. ஆனால், சில வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் சோடியம் ஹைட்ரோ சல்பைடு, சர்க்கரை, மைதா, சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்ட ரசாயனங்களை கலப்படம் செய்வதாக புகார் வந்தது.

இந்தப் புகாரை அடுத்து, சேலம், செவ்வாய்ப்பேட்டை வெல்லம் மண்டியில் ஆய்வு செய்ததில், 41 டன் எடையுள்ள வெல்லத்தில் கலப்படம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வெல்லத்தை பறிமுதல் செய்துள்ளோம். உணவு மாதிரி பரிசோதனைக்காக கலப்பட வெல்லம் மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.

பகுப்பாய்வு கூட அறிக்கையில் கலப்படம் செய்திருப்பது உறுதியானால், கலப்படம் செய்து வெல்லம் தயாரித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். வெல்லம் தயாரிப்பவர்களும், விற்பனை செய்பவர்களும் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் உரிமம் பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு உரிமம் இல்லாமல் வெல்லம் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்