கீழக்கரையில் சாதி மாறி திருமணம் செய்த பெண்ணை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக, பாதிக்கப்பட்ட பெண் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள மீனவர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முனியசாமியும், தேவியும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர். அதனால் தேவி தனது மூன்று குழந்தைகளுடன் அதே பகுதியில் சொந்த வீட்டில் வசிக்கிறார். அவர் மீன் வியாபாரம் செய்து குடும் பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் கிராமத்தினர் தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக தேவி ஆட்சி யரிடம் நேற்று மனு அளித்தார்.
இதுகுறித்து தேவி கூறிய தாவது: நானும், எனது கணவரும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். மீனவர் குப்பத்தில் எனது கணவரின் சாதியைச் சேர்ந்தவர்களே அதிகம் இருக்கின்றனர். நான் வேறு சாதி என்பதால், எனது கணவர் பிரிந்து சென்றதும், என் குடும்பத்தை கிராம நிர்வாகிகள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர். இத னால் கிராமத்தில் நாங்கள் பொது இடத்தில் தண்ணீர் பிடிக்கவும், கிராம மக்களுடன் பேசவும் தடை விதித்தனர். எனது மூத்த மகளை எனது கணவரின் சாதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளேன். இந்நிலையில் கிராம நிர்வாகிகள் என்னை ஊரைவிட்டுச் சென்று, என் சாதி மக்களுடன் சேர்ந்து கொள்ளச் சொல்கின்றனர். நான் மீனவர் குப்பத்தில் சொந்த வீடு கட்டி வசிக்கிறேன். இப்பகுதி மக்களுடன் எனது குடும்பத்தினர் சேர்ந்து வாழ ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மனுவைப் பெற்ற ஆட்சியர் கொ. வீரராகவராவ் காவல்துறை மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago