வெப்பச் சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 28, 29 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
குமரிக்கடல் பகுதியில் சூறைக் காற்று வீச வாய்ப்புள்ளது. அத னால் அடுத்த 2 நாட்களுக்கு அப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 16 செ.மீ மழை பெய்திருக்க வேண் டும். ஆனால் 8 செ.மீ மழை மட்டுமே கிடைத்துள்ளது. புதுச்சேயில் 34 செ.மீ மழை பெய்திருக்க வேண் டும். ஆனால் 13 செ.மீ மட்டுமே பெய்துள்ளது.
சென்னையில் 30 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 8 செ.மீ மழை மட்டுமே பெய்துள் ளது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் தற்போது வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 34 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 30 செ.மீ மட்டுமே கிடைத் துள்ளது.
திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ, தேனி மாவட்டம் கூடலூரில் 5 செ.மீ, காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத் தில் 4 செ.மீ, ராமநாதபுரம் மாவட் டம் ராமேஸ் வரத்தில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago