துணைத் தலைவர் பதவிகளை எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு ஒதுக்கும்வரை உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க தடை கோரி வழக்கு

By செய்திப்பிரிவு

உள்ளாட்சித் தேர்தலில் மாநக ராட்சி துணை மேயர், நகராட்சி துணைத் தலைவர் மற்றும் பஞ்சா யத்து துணைத் தலைவர் பதவி களை எஸ்சி, எஸ்டி மற்றும் அதே வகுப்பைச் சேர்ந்த பெண் களுக்கு ஒதுக்கும் வகையில் இடஒதுக்கீடு செய்யும்வரை உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்க தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் எம்எல்ஏவும், இந்திய குடியரசுக் கட்சி நிறுவனருமான செ.கு.தமிழரசன் சென்னை உயர் நீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 33 மாவட்ட பஞ்சாயத்து, 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 388 பஞ்சாயத்து ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 618 கிராம பஞ்சா யத்துகள் என மொத்தம் 13 ஆயிரத்து 870 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற வுள்ளது. இந்தப் பதவிகளில் மாநகராட்சி துணை மேயர், நகராட்சி துணைத் தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் அதில் எந்தவொரு இடஒதுக் கீடும் கடைபிடிப்பதில்லை. நேரடித் தேர்தலுக்கு மட்டுமே இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப் படுகிறது.

ஏற்கெனவே இந்தப் பதவிகளுக்கு பெண்கள், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடி இனத்தவர்களை நியமிக்கும் வகையில் புதிதாக சட்டம் கொண்டுவர கடந்த 2012-ல் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. ஆனால் அதன்படி தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே அந்த உத்தரவின் அடிப்படையில் இந்த துணைத் தலைவர் மற்றும் துணை மேயர் பதவிகளை பட்டியல் இனத் தவர்கள், பழங்குடி இனத்தவர்கள் மற்றும் அதே வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் 4 மாநகராட்சிகளில் துணை மேயர், 46 நகராட்சிகளில் துணைத் தலைவர், 168 பேரூராட்சிகளில் துணைத் தலைவர், ஒரு மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் மற்றும் 3,786 பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிகள் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு கிடைக்கும்.

எனவே மேற்கூறிய பதவிகளை பட்டியல் இனத்தவர்கள், பழங்குடி இனத்தவர்கள் மற்றும் இதே வகுப்புகளைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கும் வகையில் உரிய இடஒதுக்கீட்டை வழங்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்