தமிழ்வழி, கலப்பு மணம் பிரிவுகளுக்கான இடஒதுக்கீடு உட்பட சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் பல்வேறு குளறுபடிகள்: ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளிக்க தேசிய எஸ்.சி. ஆணையம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை

சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் தமிழ்வழி, கலப்பு திருமணம் பிரிவு களுக்கான இடஒதுக்கீடு விவகாரத் தில் முன்னுரிமை அளிக்கப்பட வில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழக அரசுப்பள்ளிகளில் தையல், ஓவியம், இசை ஆகிய சிறப்பாசிரியர் பணியில் உள்ள 662 காலியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) 2017 செப்டம்பர் 23-ம் தேதி போட்டித் தேர்வு நடத் தியது. சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வுக்குப் பிறகு 514 பேருக்கு பணிநியமன ஆணை கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் பல்வேறு குளறு படிகள் நடைபெற்று உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து தேர்வெழுதிய சிலர் கூறியது: 1,300 பேர் வரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்ச்சி பெற்றனர். அதில் தமிழ்வழியில் படித்தவர்கள் அதற்குரிய சான்றிதழை சமர்ப்பிக்க டிஆர்பி உத்தரவிட்டது. ஆனால், சிறப்பாசிரியர் தேர்வை நடத்தும் தேர்வுத் துறை சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து சான்றிதழ் சமர்ப்பிக்காதவர்களை புறக்கணித்து தேர்ச்சி பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்வர்கள் பலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதன்பின் திருத் தப்பட்ட புதிய பட்டியலை கடந்த செப்டம்பர் மாதம் டிஆர்பி வெளி யிட்டது. அதில் மொத்தமுள்ள 662 பணியிடங்களுக்கு 537 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந் தனர். இதர 125 ஆசிரியர் பணி யிடங்களுக்கான தேர்ச்சி விவரம் எந்தக் காரணமும் கூறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் இருந்த பல ஆசிரியர்களின் பெயர்களும் நீக் கப்பட்டன. தற்போது கலந்தாய்வு முடிவில் 65 பேர் தமிழ்வழியில் இடஒதுக்கீடு அடிப்படையில் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழ்வழிச் சான்றிதழ் அளிக்க தேர்வுத் துறை மறுத்துவிட்ட சூழலில் எதன் அடிப்படையில் இவர்களுக்கு இடஒதுக்கீட்டில் வேலை வழங்கப் பட்டது எனத் தெரியவில்லை. மேலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிலை பற்றியும் கூறப் படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே திருநெல் வேலியைச் சேர்ந்த முத்து என் பவர் தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில், ‘‘அரசு வேலைவாய்ப்பில் கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால், சிறப்பாசிரியர் நியமனத் தில் இந்த இடஒதுக்கீடு வழங்கப் படவில்லை’’ என்று கூறியிருந்தார். இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட ஆணையம் இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நவம்பர் 30-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக கலை ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜ்குமார் கூறும் போது, ‘‘பணிநியமனங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. தமிழ்வழி உட்பட சிறப்புப்பிரி வுக்கான இடஒதுக்கீடு விவகாரத் தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. தகுதியான மாற்றுத்திறனாளிகள் பலர் தேர் வெழுதியும் ஒருவருக்குகூட இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வழங்க வில்லை. இதேபோல், கலப்பு திரு மணம் செய்தவர்கள் பலர் முறை யான சான்றுகள் சமர்ப்பித்தும் வாய்ப்பளிக்க டிஆர்பி மறுத்துவிட் டது. துறை அதிகாரிகள் திட்டமிட்டே குளறுபடிகளை செய்கின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்