மதுரை
நாட்டில் எங்குமே இல்லாத நிலை யாக, மதுரையில் 45 கி.மீ. தூரத்தில் ஐந்து டோல்கேட்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதனால் விரைவான பயணத்துக்காக அமைக்கப்பட்ட நான்குவழிச் சாலையில் வாக னங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் சார்பில், மதுரை உத்தங் குடி முதல் கப்பலூர் வரை சுற்றுச்சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இச்சாலையில் சிவகங்கை சந்திப்பு (மஸ்தான்பட்டி), சிந்தாமணி சந்திப்பு, வலையங்குளம் சந்திப்பு (பரம்புபட்டி) ஆகிய இடங்களில் புதிதாக டோல்கேட் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு நவ.22-ம் தேதி முதல் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நான்குவழிச் சாலையில் மேலூர் அருகே சிட்டம்பட்டி, தூத்துக்குடிச் சாலையில் எலியார்பத்தி, திருமங்கலம் சாலையில் கப்பலூர் ஆகிய இடங்களில் ஏற்கெனவே பல ஆண்டுகளாக டோல்கேட் மையங்கள் செயல்படுகின்றன.
தற்போது சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் வாகனங்கள் மதுரை மாவட் டத்தில் மட்டும் சிட்டம்பட்டியில் இருந்து கப்பலூர் வரை மாநிலச் சாலையில் புதிதாக திறக்கப்பட் டுள்ள மூன்றையும் சேர்த்து மொத்தம் ஐந்து டோல்கேட் மையங்களில் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
தூத்துக்குடிக்குச் செல்லும் வாகனங்கள் சிட்டம்பட்டி, மாநில நெடுஞ்சாலையில் சிவகங்கை சந்திப்பு, சிந்தாமணி சந்திப்பு ஆகிய இடங்களில் புதிதாக திறக்கப் பட்டுள்ள டோல்கேட் மையங்கள் மற்றும் எலியார்பத்தி டோல்கேட் மையம் என 4 மையங்களில் கட்ட ணம் செலுத்த வேண்டியுள்ளது.
நகர் பகுதியில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்கள் விரைவாக செல் லவும் நான்குவழிச் சாலை, சுற்றுச்சாலை அமைக்கப்படு கின்றன. அதில், அடுத்தடுத்து டோல்கேட் மையங்களை அமைக் கும்போது, ஒவ்வொரு மையத் திலும் வாகனங்கள் நின்று செல்வதால் விரைவு பயணத் துக்கான நோக்கம் நிறைவேறாமல் போய் விடுகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தின் டோல்கேட் மையங்களில் 8 வழித்தடங்கள் உள்ளன. புதிதாக திறக்கப்பட்டுள்ள 3 டோல்கேட் மையங்களிலும் 4 வழித்தடங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. இதனால் புதிய டோல்கேட் மையங்களில் வாகன ஓட்டுநர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி யுள்ளது. இந்த மையங்களால் பண விரயம், கால விரயம் போன்ற சிரமங்களை வாக னங்களில் செல்வோர் சந்திக் கின்றனர். இது குறித்து எட்டிமங் கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் கூறியதாவது:
நாட்டிலேயே மதுரையில் தான் 45 கி.மீ. தூரத்துக்குள் 5 டோல்கேட் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில நெடுஞ்சாலையில் தனியே கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்க மதுரை சுற்றுச்சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கலாம். அல்லது மதுரையில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள 3 டோல்கேட்களையும் மூடிவிட்டு, சென்னையில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு சிட்டம்பட்டியிலும், விருதுநகரில் இருந்து வரும் வாகனங்களுக்கு கப்பலூரிலும், தூத்துக்குடியில் இருந்து வரும் வாகனங்களுக்கு எலியார்பத்தியிலும் உள்ள டோல்கேட்களில் மதுரை சுற்றுச் சாலையை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை வசூலிக்கலாம்.
பின்னர் அந்த தொகையை மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு பகிர்ந்தளிக்கலாம். இவ்வாறு செய்வதால் மதுரையில் 3 டோல் கேட் மையங்களில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. இதனால் எரிபொருள் மிச்சமாகும். இவ்வாறு அவர் கூறினார்.வாகன ஓட்டுநர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த மையங்களால் பண விரயம், கால விரயம் போன்ற சிரமங்களை வாகனங்களில் செல்வோர் சந்திக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago