குட்கா ஊழல் வழக்கு: முன்னாள் டிஜிபி  ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் 

By செய்திப்பிரிவு

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட் களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கடந்த 2016-ல் சென்னை அருகே உள்ள ஒரு குட்கா குடோனில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமான ஆவணங் கள் சிக்கின.

அங்கு கைப்பற்றப்பட்ட டைரி யில், தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அதிகாரி களுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுதப்பட்டிருந்தது. குட்கா முறை கேடு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாது காப்புத் துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார், மத்திய கலால் வரித் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கு சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இந்த வழக்கில் ஏற்கெனவே சிபிஐ அதிகாரிகள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே, குட்கா ஊழல் வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை நடந்த புகார் தொடர் பாக அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டு வரு கிறது. இதுதொடர்பாக அமலாக்கத் துறையினர் கடந்த ஆண்டு ஜூனில் வழக்கு பதிவு செய்தனர். அடையாளம் தெரியாத மத்திய, மாநில அரசு அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதி காரிகள், தனி நபர்கள் மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்த தாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2013 முதல் 2016-ம் ஆண்டு வரை சட்ட விரோதமாக ரூ.639 கோடிக்கு குட்கா வியாபாரம் செய்ததாகவும், இதன்மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்ததாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.

குட்கா விற்பனை மூலம் ரூ.639 கோடிக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்துள்ளது. குட்கா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 2-ம் தேதி டி.கே.ராஜேந்திரனும், 3-ம் தேதி கூடுதல் ஆணையர் தினகரனும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்