சட்டம் - ஒழுங்குக்காக கட்டுப்பாடு விதிக்கலாம்; மதரீதியிலான வழிபாட்டை தடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

கட்டுப்பாடுகளை விதித்து மதரீதியிலான வழிபாட்டு உரிமை களை தடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரம்பலூர் மாவட்டம் நாரண மங்கலத்தைச் சேர்ந்த வரதராஜ் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘எங்கள் ஊரில் விநாய கர், மாரியம்மன், செல்லியம்மன் என 3 கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களை பிற் படுத்தப்பட்ட மக்கள் நிர்வகித்து வருகின்றனர். கடந்த 200 ஆண்டு களாக திருவிழா மற்றும் தேரோட் டம் நடைபெற்று வருகின்றன. ஊரில் உள்ள அனைத்து தெருக் கள் வழியாகவும் தேர் இழுத்து வரப்பட்டு வழிபாடு நடத்தப்படு வது வழக்கம். கடந்த 2007-ம் ஆண்டு தேர்த் திருவிழாவில் முதல்மரி யாதை செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டதால் தேரோட் டம் நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு தேரோட்டம் நடத்த அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, மாவட்ட வருவாய் அதிகாரி மூலம் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண உத்தரவிட்டு இருந்தார். பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் வரதராஜ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘மதரீதியிலான இறைவழிபாடு என்பது மக்களின் அடிப்படை உரிமை.

இந்த வழிபாடுகளை தடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது. வழிபாட்டு நிகழ்வு களின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் பிரச்சினை ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தவும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவும் மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது.

கட்டுப்பாடுகளை விதித்து மதரீதியிலான வழிபாட்டு உரிமைகளை தடுக்க முடியாது. எனவே, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் இதுதொடர்பாக கிராம மக்களுடன் கலந்து பேசி பிரச் சினைக்கு சுமுகத் தீர்வு கண்டு தேர்த் திருவிழாவை அமைதியான முறையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தர விட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்