புதுச்சேரியில் தற்கொலை செய்து கொண்ட உதவி ஆய்வாளர் விபல் குமாரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் சிபிஐ விசாரணை கேட்டு நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வா ளராக பணியாற்றி வந்த விபல்குமார் (38) நேற்று முன்தினம் அங்குள்ள காவல்நிலைய ஓய்வறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக விபல்குமார் தனது டைரி யில் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். இது தொடர்பாக விபல்குமாரின் மாம னார் ராஜேந்திரனிடம் புகாரை பெற்று தற்கொலை பிரிவின் கீழ் நெட்டப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயர் அதிகாரி அழுத்தத்தினால் விபரீத முடிவை எடுத்தாரா? அல் லது குடும்ப பிரச்னையா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப் பட்டது.
பெண் ஒருவர் கொடுத்த வழக்கை விசாரிக்கக் கூடாது, அப் புகாரை போக்சோ வழக்கின் கீழ் பதிவு செய்யக் கூடாது என தொடர்ந்து விபல்குமாருக்கு அழுத் தம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் இவ்விவகாரத்தில் உயர் அதிகாரியால் மெமோ கொடுக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஒரு வாரமாக விடுமுறையில் இருந்த விபல்குமார் நேற்று முன்தினம் மீண்டும்
பணிக்கு திரும்பிய நிலையில், மனஅழுத்தம் அதிகமாகி தற் கொலை முடிவை எடுத்தாரா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அதன்பேரில் இவ்வழக்கில் சிபிசிஐடியும் தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்கொலை செய்த உதவி ஆய்வாளர் விபல்குமாரின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட இருந்தது. இதற் காக கதிர்காமம் அரசு மருத்துவ மனைக்கு அவரது தந்தை பாலு, தாய் விஜயா மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர்.
இன்ஸ்பெக்டர் காரணமா?
திடீரென அவர்கள் உதவி ஆய் வாளரின் உடலை வாங்க மறுத்து, காங்கிரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் தலைமையில் வழுதாவூர் சாலை யில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு சமூக அமைப்புகளும் போராட்டம் செய்தனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்து வந்த கோரிமேடு மற்றும் மேட்டுப் பாளையம் போலீஸார் அங்கு வந்து, வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பினர்.
பின்னர் துணை ஆட்சியர் சுதாகர், எஸ்பிக்கள் ஜிந்தா கோதண்ட ராமன், ரங்கநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விபல்குமார் மரணம் குறித்து பல்வேறு கேள்விகளை அதிகாரிகளிடம் அவர்கள் எழுப்பி னர். காவல் நிலையத்திலேயே உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்டிருப்பதை ஏற்க மறுத்த உறவினர்கள் ஆவசமாக பேசினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இதற்கு காரணமான இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத் தினர். இவ்வழக்கை புதுச்சேரி காவல்துறை விசாரித்தால் உண்மை நிலவரம் மூடி மறைக்கப்படலாம் என்பதால் சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும், இறந்த எஸ்ஐ குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அது வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி மறியலை தொடர்ந்தனர்.
அவர்களை துணை ஆட்சியரும், எஸ்பிக்களும் சமாதானப்படுத்த முயன்றும் அதை உறவினர்கள் ஏற்காத நிலையில், சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் அங்கு வந்தார். மறியலில் ஈடுபட்டவர்களிடம் மேட்டுப்பாளையத்தில் உள்ள வடக்கு எஸ்பி அலுவலகத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த லாம் என கூறியதையடுத்து முக்கிய நிர்வாகிகள் அங்கு அழைத்து செல் லப்பட்டனர். இதையடுத்து மறியல் தற்காலி கமாக கைவிடப்பட்ட நிலையில், அங்கு போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியது.
இதனிடையே மேட்டுப்பாளை யம் எஸ்பி அலுவலகத்தில் போராட் டக்குழு நிர்வாகிகளிடம் துணை ஆட்சியர் சுதாகர், சீனியர் எஸ்பி ஆகியோர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனிடையே உதவி ஆய்வாளர் விபல்குமாரின் உடல் கதிர்காமம் அரசு மருத்துவ மனை சவக்கிடங்கில் வைக்கப்பட் டுள்ளது. பேச்சுவார்த்தை முடிந்தவு டன் அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, அரசூரில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தெரிகிறது.
ஆளுநர், முதல்வர் டிஜிபியிடம் மனு
இதற்கிடையே உதவி ஆய்வாளர் விபல்குமாரின் தந்தை முன்னாள் ராணுவ வீரர் பாலு, விபல்குமார் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இறப்புக்கு காரணமான இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனை பணிநீக்கம் செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி புதுச்சேரி ஆளுநர், முதல் வர், தலைமை செயலர், டிஜிபி ஆகி யோருக்கு புகார் மனு அளித்து ள்ளார்.
மேலும் உதவி ஆய்வாளர் விபல் குமாரின் தற்கொலை மற்றும் அவர் எழுதிய டைரியில் இடம்பெற்றுள்ள தகவல்களை முழுமையாக வெளி யிட வேண்டுமென தொல்காப்பிய லஞ்ச ஒழிப்பு இயக்கம், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு கேள்விகளை வலியுறுத்தி உள்ளன. சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டுமெனவும் கூறி யுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago