ராமேசுவரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது பெண்ணின் வயிற்றில் ஊசி வைத்து தைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள மரவெட்டி வலசையைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி ரம்யா(20). இவர் பிரசவத்துக்காக உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 19-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். பிரசவம் பார்த்த செவிலியர்கள் அப்போது அங்கு மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் ரம்யாவுக்கு 2 தினங்களாக வயிற்றில் வலி ஏற்பட்டது. ரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, ரம்யாவின் வயிற்றில் மருந்து செலுத்தும் ஊசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
உறவினர்கள் முற்றுகைஇதை அறிந்த உறவினர்கள், வயிற்றில் ஊசி வைத்து தைத்த செவிலியர்கள், பிரசவ நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர். இவர்களிடம் உச்சிப்புளி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.
2 மணி நேர அறுவை சிகிச்சைஇதனிடையே மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ரம்யா வயிற்றில் இருந்த ஊசியை மருத்துவக் குழுவினர் சுமார் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணியின்போது அலட்சியமாகச் செயல்பட்ட காரணத்துக்காக செவிலியர்கள் அன்புச் செல்வி, சத்தியபாமா ஆகியோரை சுகாதாரத் துறை துணை இயக்குநர் குமரகுருபரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், மருத்துவர் ஜாகிர் உசைனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago