கடலோர பகுதிகளில் பெருநிறுவன திட்டங்களை அனுமதிக்க கூடாது: இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தமிழக கடலோரப் பகுதிகளில் பெருநிறுவனங்களுக்கு சாதகமான திட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வலியுறுத்தியுள்ளார்.

மீனவர்களுக்கு வாழ்வாதார மாக விளங்கும் கடலோரப் பகுதி களில், பெருநிறுவனங்கள் புதிய திட்டங்களை செயல்படுத்தும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2019-ஐ திரும்பப் பெற வேண்டும்.

இலங்கைப் கடற் படை பிடிக்கும் தமிழக மீனவர் களின் படகுகளை மீட்க வேண் டும். மீன்பிடி தொழிலை பாது காக்க மத்திய அரசு தனி அமைச் சகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி, உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.நல்லகண்ணு கூறியதாவது:

இந்திய மாநிலங்களில் அதிக கடலோரப் பகுதியை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இங்கு 1,077 கிமீ நீள கடற்கரை உள் ளது. தமிழகத்திலிருந்து மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.600 கோடி வரு வாய் கிடைக்கிறது.

கடலோரப் பகுதிகளில் உள்ள பாரம்பரிய மீனவ பகுதிகளெல்லாம் தற் போது குடியிருப்புகளாகவும், பெரு நிறுவனங்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. கடலோரப் பகுதியில் பெருநிறுவனங்கள் வந்துவிட்டால், மீனவர்கள் மற்றும் அத்தொழில் சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

கடலோரப் பகுதியில் வசிக்கும் மீனவர்களுக்கு எந்தவித சட்டப் பாதுகாப்பும் இல்லை. எனவே மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மீனவர்களின் கடலோர உரி மையை பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப் பாணை 2019-ஐ ரத்து செய்ய வேண்டும்.

மாநகராட்சி மேயர் மற்றும் நக ராட்சி, பேரூராட்சி தலைவர் பதவி களுக்கு மறைமுக தேர்தல் முறையை தமிழக அரசு கொண்டு வந்திருப்பது, மக்கள் ஜனநாயகத் துக்கு விரோதமானது. அதை திரும்பப்பெற வேண்டும். இவ் வாறு ஆர்.நல்லகண்ணு பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏஐடியூசி மாநில பொதுச்செயலர் டி.எம்.மூர்த்தி, மீனவத் தொழி லாளர் சங்க பொதுச்செயலர் பி.சின்னதம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மீனவர்களின் கடலோர உரிமையை பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2019-ஐ ரத்து செய்ய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்