ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் படித்துவந்த கேரள மாணவி பாத்திமா லத்தீப், கடந்த 9-ம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கோட்டூர்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், வழக்கு விசாரணை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பிரேத பரி சோதனையிலும் உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
‘‘சென்னை ஐஐடியில் கடந்த 2 ஆண்டுகளில் 5 மாணவர்கள் மர்மமான முறையில் இறந்துள் ளனர். பாத்திமா மரணத்திலும் பல மர்மங்கள், சந்தேகங்கள் உள்ளன. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தர விட வேண்டும்’’ என்று அதில் கோரியுள்ளனர்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago