மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலால் அதிமுகவில் போட்டியிட விருப்பமனு அளித்த கட்சியினர் கலக்கம்

By செய்திப்பிரிவு

மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்த தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளதால் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனு மீண்டும் வழங்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. இதனால், அதிமு கவில் இப்பதவிகளுக்கு மட்டும் ‘சீட்’ கேட்டு விண்ணப்பித்தோர் கலக்கம் அடைந்துள்ளனர்.

மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களுக்கு கடந்த முறை நேரடித் தேர்தல் நடந்தது. மக்கள் வாக்களித்து அவர்களைத் தேர்வு செய்தனர். இதே நடைமுறை வர இருக்கிற உள்ளாட்சித் தேர்தலில் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த அடிப்படையிலே ஆளும்கட்சியான அதிமுகவில் மேயர், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெறப்பட்டது. இதில், மேயர் பதவிக்கு வர விரும்பிய பலர் அதற்கு மட்டும் போட்டியிட விருப்பமனு வழங்கினர். அவர்கள் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட விருப்பமனு வழங்கவில்லை.

இந்நிலையில் தமிழக அரசு நேற்று திடீரென மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடக்கும் என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலரே அவர்களை தேர்வு செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

அதிமுகவில் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு தனியாகவும், கவுன்சிலர் பதவிக்கு தனியாகவும் 2 நாட்கள் மட்டுமே விருப்பமனு பெறப்பட்டது.

அதனால், மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவி களுக்கு மட்டும் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களுக்கு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட மீண்டும் விருப்பமனு கொடுக்க மறுவாய்ப்பு வழங்கப்படுமா? என்பது தெரியவில்லை. அதனால், அவர்கள் கலக்கமும், குழப்பமும் அடைந்துள்ளனர்.

இது குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டபோது, மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மட்டும் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களுக்கு கட்சி மேலிடம் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கொடுக்க நினைத்தால் அவர்கள் குடி யிருக்கும் வார்டுகளிலே போட் டியிட வாய்ப்பு வழங்கும்.

இல்லாவிட்டால் அவர்களிடம் மட்டும் மீண்டும் விருப்பமனு வாங்க கட்சி மேலிடம் அனுமதி வழங்கும். அவர்களை நிராகரிக்க மாட்டார்கள், ’’ என்றனர்.கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட மீண்டும் விருப்பமனு கொடுக்க மறுவாய்ப்பு வழங்கப்படுமா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்