2018-ம் ஆண்டில் அதிக சுற் றுலாப் பயணிகள் வருகைதந்த மாவட்டங்கள் குறித்து சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பிரிவில் திருச்சி மாவட்டத்துக்கு 5-ம் இடம் கிடைத்துள்ளது.
இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சி யில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாக விளங்குகிறது. தொன்மையான வரலாற்று நினைவுச் சின்னங்கள், பழமையான கோயில்கள், பண்பாட்டை விளக்கும் திருவிழாக்கள், குகை ஓவியங்கள், நீண்ட கடற் கரைகள், எழில் கொஞ்சும் மலைப் பகுதிகள், அருவிகள் என அந்தந்தப் பகுதிகளின் தன்மைக் கேற்ப மாநிலம் முழுவதும் சுற்றுலாத் தலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றைக் கண்டு களிக்கவும், கல்வி மற்றும் மருத்துவ சுற்றுலாவாகவும் உள்நாட்டினர் மட்டுமின்றி, வெளிநாட்டினரும் அதிக எண்ணிக் கையில் தமிழ்நாட்டுக்கு வந்து செல்கின்றனர்.
கணிசமாக உயர்வு
இதன் காரணமாக கடந்த 2015, 2016, 2017-ம் ஆண்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் இங்கு வருகைதந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 34.50 கோடியாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 48.60 லட்சமாகவும் இருந்தது. இந்த எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் கணிசமாக உயர்ந்து உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 38.59 கோடியாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 60.73 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு சுற்றுலா பயணிகள்
இதற்கிடையே கடந்த 2018-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்குள் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைதந்த மாவட்டங்களின் தரவரிசைப் பட்டியலை மாநில அரசின் சுற்றுலாத் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பிரிவில் காஞ்சிபுரம் மாவட்டம் (4.19 கோடி பேர்) முதலிடம் பிடித்துள்ளது.
சென்னை (3.82 கோடி) இரண்டாமிடம், ராமநாதபுரம் (2.82 கோடி) மூன்றாமிடம், திண்டுக்கல் (2.81 கோடி) நான்காமிடம், தஞ்சாவூர் (2.49 கோடி) ஐந்தாமிடம் பிடித்துள்ளன. அதைத்தொடர்ந்து மதுரை (2.45 கோடி), கன்னியாகுமரி (2.42 கோடி), திருச்சி (1.939 கோடி), தூத்துக்குடி (1.938 கோடி), கோவை (1.74) கோடி என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி கள் வருகையில் சென்னை மாவட் டம் (25.24 லட்சம் பேர்) முதலிடம் பிடித்துள்ளது. காஞ்சிபுரம் (17.15 லட்சம்) இரண்டாமிடம், தஞ்சாவூர் (35.61 லட்சம்) மூன்றாமிடம், மதுரை (28.21 லட்சம்) நான்கா மிடம், திருச்சி (27.28 லட்சம்) ஐந்தாமிடம் பிடித்துள்ளன. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி (21.29 லட்சம்), திண்டுக்கல் (13.26 லட்சம்), நீலகிரி (12.91 லட்சம்), திருவண்ணாமலை (12.34 லட்சம்) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
மாவட்டங்களை ஊக்குவிக்கவே
இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சுற்றுலாத் துறையில் முன் னேற்றம் காணும் மாநிலங்களை ஊக்குவிப்பதற்காக ஆண்டு தோறும் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் வெளியிடப் படுகிறது. அதைப்போலவே தமிழ்நாட்டி லுள்ள மாவட்டங்களை ஊக்குவிப் பதற்காக தற்போது மாநில அளவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல உள்நாட்டு சுற் றுலாப் பயணிகள் வருகையில் பெரம்பலூர், புதுக்கோட்டை, அரிய லூர் ஆகிய மாவட்டங்கள் கடைசி 3 இடங்களைப் பிடித்துள்ளன. இதில் புதுக்கோட்டை மாவட் டத்தில் சித்தன்னவாசல், திரும யம் கோட்டை போன்ற பல முக்கியமான இடங்கள் இருந்தும், அங்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
தரவரிசையில் பின்தங்கிய நிலையிலுள்ள மாவட்டங்களில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத் தவும், புதிதாக சுற்றுலாத் திட்டங் களை உருவாக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும்.
சுற்றுலா வளர்ச்சி பெறுவதால் உள்ளூர் வணிகம் வளர்ச்சி பெறு வதுடன், அந்நிய செலாவணி வருவாயும் அதிகரிக்கும். மேலும் சுற்றுலா திட்டமிடுவோர், ஆலோசகர்கள், வழிகாட்டிகள், பயண ஏற்பாட்டாளர்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல், திருமயம் கோட்டை போன்ற பல முக்கியமான இடங்கள் இருந்தும், அங்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago