தமிழக தொல்லியல் துறையில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அறிவித்தார்.
சென்னையில் நேற்று கீழடி புகைப்படக் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. இதில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கண்காட் சியை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
கீழடி புகைப்படக் கண்காட்சி மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இக்கண் காட்சியை நடத்த விரும்பும் கல்லூரி களிலும் இது நடத்தப்படும். கீழடியில் உலகத் தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.12 கோடியை முதல்வர் பழனிசாமி ஒதுக்கியுள்ளார். அடுத்த ஓராண்டில் இப்பணியை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
அருங்காட்சியகத்துக்கான இடமும், வடிவமைப்பும் இறுதி செய்யப்பட்டுவிட்டது. திறந்த வெளி அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் தமிழர் பண் பாட்டுப் பெட்டகமாகத் திகழும்.
4 இடங்களில் அகழாய்வு பணி
கீழடி கண்டுபிடிப்புக்குப் பிறகு தொல்லியல் துறை தொடர்பாக மாணவர்களிடம் மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு வரும் ஜனவரி 15-ம் தேதி தொடங்க வுள்ளது. கீழடி மற்றும் அதைச் சேர்ந்த மணவூர், கொந்தவை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய இடங்கள், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நெல்லை மாவட்டம் சிவகளை ஆகிய 4 இடங்களி லும் ஆழமான அகழாய்வுப் பணி களை மேற்கொள்ள ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறையில் காலியாக வுள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்படும்.
பிரதமர் மோடி, சீன அதிபரின் மாமல்லபுரம் சந்திப்புக்கு பிறகு, அந்த இடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாமல்லபுரத்தில் சிற்பக் கலையை வலுப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. மாமல்லபுரத்தை மையமாகக் கொண்டு சிற்பக் கலையை மேம்படுத்த மத்திய அரசிடம் ரூ.100 கோடி கேட்டுள்ளோம்.
பள்ளி மாணவர்களை ஆண்டுக்கு ஒருமுறை அருகில் உள்ள அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அறிவியல் ஆய்வகம் போல, அருங்காட்சியகங்கள் வரலாற்று ஆய்வகமாக உருவாக்கப்படு கின்றன. இயற்கை வரலாறு, சமூக வரலாறு, அரசியல் வரலாறு, பொருளாதார வரலாறு உள்ளிட்ட 6 விதமான வரலாறுகளை அங்கு ஆவணப்படுத்தவுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago