சென்னை
தேசிய அடையாள அட்டை தயாரிக்கும் பணி மெத்தனமாக நடப்பதால் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு கல்வி, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்த உதவிகளைப் பெற, மாற்றுத்திறன் சதவீதம் குறிப்பிடப் பட்ட மருத்துவச் சான்று, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண் டும். இவ்வாறு ஒவ்வொரு முறை யும் மருத்துவர்களிடம் மருத்துவச் சான்றை பெற்று விண்ணப்பிப்ப தால் நலத்திட்ட உதவிகளை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, கால விரயத்தை குறைக் கவும், மாற்றுத்திறனாளிகளின் முழு விவரங்களை சேகரிக்கவும் தேசிய அடையாள அட்டை வழங் கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016 ஏப்ரல் மாதம் அறிவித்தது. 3 ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டது.
இதன்படி, கர்நாடகா, டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் 60 சதவீதத்துக்கு மேல் பணிகள் முடிந்துவிட்டன. ஆனால், தமிழகத் தில் இப்பணி மெத்தனமாக நடக்கிறது. தேசிய அடையாள அட்டை கோரி தமிழகம் முழுவதும் 9 லட்சம் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ள நிலையில், 2.60 லட்சம் பேருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட் டுள்ளது. இதனால், நலத்திட்ட உதவிகளை விரைந்து பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் பி.சிம்மசந்திரன் கூறியதாவது:
பயனாளிகளின் மாற்றுத்திறன் சதவீதம் அடிப்படையிலேயே அனைத்து உதவிகளும் வழங்கப் படுகின்றன. இதனால், எந்த திட்டத்துக்கு விண்ணப்பித்தாலும், மாற்றுத்திறன் சதவீதத்துக்கு மருத்துவச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டி உள்ளது.
மருத்துவர்களும் இந்த சான்றி தழை உடனே வழங்குவது இல்லை. பலமுறை அலைய விடுவதால் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஒவ்வொரு முறையும் அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து விண்ணப்பித்து உதவிகளைப் பெற மாதக்கணக்கில் ஆகிறது.
ஆனால், தேசிய அடையாள அட்டையில் ஆதார், மருத்துவச் சான்று, பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும். எனவே, தேசிய அடையாள அட்டை வழங்கிவிட்டால், திட்டங் களை விரைந்து பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘மாற்றுத்திறனாளிகளுக் கான மாற்றுத்திறன் சதவீதத்தை உறுதிப்படுத்தும் பணியில் மருத்து வர்கள் தாமதம் செய்வது உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் தேசிய அடையாள அட்டை வழங் கும் பணி தாமதம் ஆகிறது. விரை வாக அட்டையை வழங்க மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத் தப்பட்டு வருகின்றன. பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதி காரிகளும் அறிவுறுத்தப்பட்டு உள் ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை விரைந்து கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள் ளன’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
6 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago