புதிதாக மாவட்டங்கள் உருவாக் கப்பட்டதற்கும் உள்ளாட்சித் தேர் தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்துள்ளார்.
தமிழக அரசு புதிய மாவட்டங் களை திட்டமிட்டு பிரித்துள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சி திட்டமிட்டு வருகிறதோ என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2016-ம் ஆண்டில் உள் ளாட்சித் தேர்தலை நடத்துவதற் கான அனைத்து பணிகளும் நடை பெற்ற நிலையில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தள்ளு படி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல் முறையீடு செய்து இன்று வரை வழக்கு நிலுவையில் உள்ளது.
எனினும் கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி வார்டுகளை மறுவரை யறை செய்ய எல்லை மறு வரையறை ஆணையம் அமைக்கப் பட்டது. அதன்பின், மறுசீரமைக் கப்பட்ட வார்டுகள் அடிப்படையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர், பெண்களுக்கு இடஒதுக் கீடு செய்யப்பட்டு, அதை கடந்த மே 20, 24-ம் தேதிகளில் மாவட்ட அரசிதழ்களில் அறிவிக்கை வெளி யிடப்பட்டது.
மறுவரையறை செய்யப்பட்ட தன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் முடித்துள்ளது. முறையான ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் அறி விக்கை வெளியிடுவதற்கான ஆயத் தப்பணிகள் முடுக்கி விடப்பட் டுள்ளன.
இந்தச் சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் அரசை குறைசொல்லும் நோக்கில், இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது மிகவும் வருந்தத் தக்கது. பல்வேறு மாவட்டங்களை பிரிப்பது என்பது, அப்பகுதியில் வாழும் மக்களின் நெடுநாள் கோரிக்கையாகும். அதை ஏற்று செயல்படுத்துவது நிர்வாக நடைமுறையாகும். வரும் 2020-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக் கெடுப்பின் பூர்வாங்க பணிகள் தொடங்க இருக்கிறது. எனவே, டிச. 31-க்குப்பின் எந்த ஒரு நிர்வாக அலகையும் புதிதாக ஏற்படுத்தவோ, அல்லது அதை குறைக்கவோ இய லாது. எனவேதான் பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய மாவட்டங் களை உருவாக்கும் பணியை தமிழக அரசு விரைவாக முடித்து நடை முறைப்படுத்தியுள்ளது.
புதிதாக மாவட்டங்கள் தோற்று விக்கப்பட்டாலும், ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட எல்லை வரையறைப்படியே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.
எனவே, புதிய மாவட்டங்கள் உருவாக்கம் தேர்தல் பணிகளை எந்த வகையிலும் பாதிக்காது என தெளிவாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற் றங்கள் தேவைப்பட்டால் தேர்தல் முடிந்தபின் மேற்கொள்ளப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே, புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும் உள்ளாட் சித் தேர்தல் நடத்தப்படுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 2018-ல் மறுவரையறுக்கப்பட்ட வார்டுகள் அடிப்படையிலேயே உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago