தமிழகத்தில் பிறமொழிகளில் இருக் கக் கூடிய ஊர்ப் பெயர்கள், தெருப் பெயர்களை தமிழில் மாற்று வதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக 1,000 பெயர்கள் விரை வில் மாற்றப்படும் என அமைச் சர் கே.பாண்டியராஜன் தெரிவித் துள்ளார்.
கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் 18-வது மாநாடு சென்னை திருவான்மியூரில் நேற்று தொடங் கியது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் கே.பாண்டி யராஜன் இளம் செஸ் மாஸ்டர் பிரகானந்தா, ரோல் பால் சாம் பியன் ஹரிஹர சுதன், பள்ளி ஆசிரியர் ரேவதி, பெண் தொழில் முனைவர் மருத்துவர் நிஷா, சமூக ஆர்வலர் ஜீவா மணிக்குமார் மற்றும் கனரா வங்கி அலுவலர் ஆர்.கஸ்தூரி ஆகியோருக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டினார்.
கனரா வங்கித் தலைவர் டி.என்.மனோகரன், வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஆர்.ஏ.சங்கர நாரா யணன் உள்ளிட்டோர் பேசினர்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பிறமொழிகளில் இருக்கக் கூடிய ஊர்ப் பெயர்கள், தெருப் பெயர்களை தமிழில் மாற்று வதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக 1,000 பெயர்கள் விரைவில் மாற்றப்படும்.
மாணவ, மாணவியரின் உளவியல்ரீதியான பிரச்சினை களைக் கன்டறிந்து அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்க ஐஐடி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐஐடி காவிமயம் ஆகிக்கொண்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருப்பதை ஏற்க முடியாது. எல்லாவற்றையும் காவிமயமாக பார்க்கக் கூடாது. தமிழகத்தில் உள்ள கல்வி மையங்களில் காவி மயம் ஏதும் இல்லை. தமிழக அரசைப் பொறுத்தவரை வானவில் லின் நிறம் போல பாரதப் பண்பாட் டில் ஒன்றாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மாநாட்டில் கனரா வங்கியின் அதிகாரிகள், அலுவலர் கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago