தைப்பூசம் திருவிழாவை ஒட்டி மேல்மருவத்தூரில் 19 விரைவு ரயில்கள் வரும் டிசம்பர் 20-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரையில் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தைப்பூசம் திருவிழாவை ஒட்டி சென்னை - மதுரை வைகை (12635), லோக்மானிய திலக் - மதுரை (11043), சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை(12661), சென்னை - நாகர்கோவில்(12667), நிஜாமுதீன் - கன்னியாகுமரி (12642), சென்னை எழும்பூர் - மன்னார்குடி (16179), தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா (16191), திருச்சி - சென்னை ராக்போர்ட் (12654), மதுரை - சென்னை வைகை (12636), மதுரை - சென்னை பாண்டியன் (12638), செங்கோட்டை - சென்னை பொதிகை (12662), மதுரை - நிஜாமுதீன் (12651), மதுரை - லோக்மானிய திலக் (11044), கன்னியாகுமரி - நிஜாமுதீன் (12641), மதுரை - சென்னை (22624), மன்னார்குடி - சென்னை (16180), ராமேஸ்வரம் - புவனேஸ்வர் (18495), நாகர்கோவில் - தாம்பரம் அந்த்யோதயா (16192) ஆகிய 19 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 20-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரையில் மேற்கண்ட விரைவு ரயில்கள் இங்கு ஒரு நிமிடம் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago