அதிமுக, தேமுதிக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் இன்றுமுதல் விநியோகிக்கப்பட உள்ளன.
உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்பு வோரிடம் இருந்து விண்ணப்பங் களைப் பெறும் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் விருப்ப மனுக்கள் விநியோகித்து, பூர்த்தி செய்து திரும்ப பெறப்படுகின்றன.
இதுதொடர்பான அறிவிப்பு மற்றும் கட்டண விவரங்கள் கடந்த 10-ம் தேதியே வெளியிடப் பட்டது. அதன்படி, மாநகராட்சி மேயருக்கு ரூ.25 ஆயிரம், வார்டு உறுப்பினர் - ரூ.5 ஆயிரம், நகர்மன்றத் தலைவர் - ரூ.10 ஆயிரம், நகர்மன்ற வார்டு உறுப்பினர் - ரூ.2 ஆயிரத்து 500, பேரூராட்சித் தலைவர் - ரூ.5 ஆயிரம், பேரூராட்சி வார்டு உறுப்பினர் - ரூ.1,500, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் - ரூ.5 ஆயிரம், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் - ரூ.3 ஆயிரம் என கட்டணம் வசூலிக் கப்படுகிறது.
இன்றும் நாளையும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டணத்தை செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனுக்களை விநி யோகிக்கவும், பூர்த்தி செய்த மனுக்களை பெறவும் பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர்.
தேமுதிக
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித் துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிட விரும்புவோர் விருப்ப மனுக்களை இன்று காலை 10 மணி முதல் அந்தந்த மாவட்ட தேமுதிக தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக் களை வரும் 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மாநகராட்சி மேயர் பதவிக்கு விருப்ப மனு கட்டணமாக ரூ.15 ஆயிரம், மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினருக்கு ரூ.4 ஆயிரம், நகராட்சி மன்ற தலைவருக்கு ரூ.7 ஆயிரம், நகராட்சி மன்ற வார்டு உறுப் பினருக்கு ரூ.1,500, பேரூராட்சி மன்ற தலைவருக்கு ரூ.4 ஆயிரம், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினருக்கு ஆயிரம் ரூபாய், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கு ரூ.4 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப் பினருக்கு ரூ.2 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago