நெல்லை மாநகரில் நாளை (நவ.15) ரிலீஸ் ஆவதாக இருந்த விஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ படத்தை திரையிட வரும் 21-ம் தேதி வரை தடை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நாசர், சூரி, நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சங்கத்தமிழன்'. விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை வரும் 21 ம் தேதி வரை மாநகர் பகுதியில் வெளியிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரணம் என்ன?
2013-ம் ஆண்டு லிப்ரா நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ’நலனும் நந்தினியும்’. வெங்கடேசன் இயக்கிய இந்தப் படத்தில் மைக்கேல், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்காக லிப்ரா நிறுவனத்தைச் சேர்ந்த ரவீந்தர் சந்திரசேகரன், நெல்லையைச் சேர்ந்த விக்னேஷ் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிடுருந்து 15 லட்ச ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார்.
இதற்குப் பிறகு பல்வேறு படங்களைத் தயாரித்தும், விநியோகித்தும் வந்தாலும் விக்னேஷ் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய பணத்தைக் கொடுக்கவில்லை.
இதனால், விக்னேஷ் பிக்சர்ஸ் நிறுவனரான விக்னேஷ்வரன் நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருநெல்வேலியில் மட்டும் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் 10 திரையரங்குகளில் வெளியாகவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago