காரைக்குடி
‘‘மொபைல் போனை கண்டுபிடித்தவனை மிதிக்கனும் போல இருக்கு; அந்த போனால் தான் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்கின்றனர்,’’ என கதர் கிராமத் தொழில்கள் நல வாரிய அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு இலவச மடிகணினி வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். இதில் 1,034 மாணவர்களுக்கு ஒரு கோடியே 33 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மடிகணினிகளை வழங்கி அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:
கிராமம், நகரங்களில் இளைஞர்கள் செல் போன் மூலம் சீரழிந்து வருகின்றனர்.
செல் போன் கண்டுபிடித்தவனை மதிக்கனும் போல இருக்கு; செல்போனால்தான் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்கின்றனர். அவர்களை நல்வழிப்படுத்தவே மடிகணினி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ நாகராஜன், முன்னாள் எம்பி செந்தில்நாதன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்கள் பழனிச்சாமி, மணிவண்ணன், கூட்டுறவு அச்சகத்துறை சங்கத் தலைவர் சசிக்குமார், வட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago