தெற்காசியப் போட்டியில் தங்கம் வென்ற வீரர் குடும்ப வறுமையால் தவிப்பு:  மத்திய, மாநில அரசுகளிடம் வேலைகோரி மனு

By இ.மணிகண்டன்

விருதுநகர்

குடும்ப வறுமை காரணமாக, தனக்கு மத்திய, மாநில அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற வீரர் மனுக்கொடுத்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த விவசாயி கணேசனின் மகன் இசக்கிமுத்து.

பி.ஏ. பட்டம்பெற்று தற்போது உடற்கல்வி ஆசிரியர் கல்வி முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 2018 ஜூன் மாதம் பூடானில் நடைபெற்ற தெற்காசிய கிராமப்புற விளையாட்டுகளில் தமிழகத்தின் பிரதிநியாகவும் இந்திய கபடி அணிக்கு கேப்டனாகவும் பங்கேற்று விளையாடி தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

விவசாயக் குடும்பத்தில் படித்து முதல் முறையாக பட்டம் பெற்றவர் இசக்கிமுத்து. பெற்றோருக்கு வயது முதிர்வு காரணமாக விவசாயப் பணிகளைப் பார்க்க முடியவில்லை. அதனால் இசக்கிமுத்து விவசாய வேலைகளைச் செய்து வருகிறார்.

இந்நிலையில், குடும்ப வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கபடி அணி வீரர் காளிமுத்து தனக்கு மத்திய அரசு அல்லது மாநில அரசு துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பணி வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.4) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க் கூட்டத்தில், கபடி விளையாட்டு வீரர் இசக்கிமுத்து தனக்கு வேலைவாய்ப்பு வழங்கி உதவுமாறு மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்திடம் கோரிக்கை மனுக்கொடுத்தார். மனுவைப் பெற்ற மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து பரிந்துரை செய்வதாகத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்