மன்னார்குடியில் பயங்கரம்: கல்லூரி பேராசிரியரின் மகன், மகள் கொலை - மனைவி கவலைக்கிடம்; உறவினர்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

மன்னார்குடியில் கல்லூரி பேராசிரியரின் மகன், மகள் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டனர். மனைவி கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர் மீனாட்சிசுந்தரம்(40). இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழ 2-ம் தெரு நல்லான்குட்டை பகுதியில் புதிதாக வீடு கட்டி, குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இவரது மனைவி பெனிட்டா(35). மன்னார்குடி அருகில் உள்ள நெம்மேலி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர்களின் மகன் கவின்முகில்(12) 7-ம் வகுப்பும், மகள் தமிழிசை(7) 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

பழநியில் தங்கியிருந்து பணிபுரியும் மீனாட்சிசுந்தரம், விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். பெனிட்டாவுக்கு உதவியாக உறவுக்காரப் பெண் ஜோதி(37) தங்கியிருந்தார். ஜோதி, நேற்று முன்தினம் மற்றொரு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டாராம். வீட்டின் கீழ்பகுதியை வாடகைக்கு விட்டு விட்டு, மீனாட்சிசுந்தரம் குடும்பத் தினர் மாடியில் வசிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை வெகுநேரமாகியும் பெனிட்டா மற்றும் குழந்தைகள் வெளியே வராததால், கீழ் வீட்டில் குடியிருப்பவர்கள் மாடிக்குச் சென்று பார்த்துள்ளனர்.

அங்கு கதவு திறந்து கிடந்த நிலையில், படுக்கை அறை கட்டிலில் தமிழிசையும், கீழே கவின்முகிலும் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர். குளியல் அறையில் பெனிட்டா உள்பக்கமாக தாழிட்ட நிலையில் ரத்தக் காயங்களுடன் மயக்கமடைந்து கிடந்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீஸார் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெனிட்டாவை மீட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்து வந்த மீனாட்சி சுந்தரம், ஜோதி உள்ளிட்டோரிடம் மன்னார்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து கிடந்த குழந்தைகளின் சடலம் அருகே ரத்தக்கறையுடன் 2 புதிய பிளேடுகளும், பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலும் கிடந்துள்ளன. பெனிட்டாவின் கழுத்தும் பிளேடால் அறுக்கப்பட் டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது, கொள்ளையடிக்கும் நோக்கில் நடந்த கொலைகளா? அல்லது பெனிட்டா குழந்தை களுக்கு விஷம் கொடுத்து, பின்னர் பிளேடால் அறுத்துக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றாரா? என்ற கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர்கள் சாலை மறியல்…

கொலையாளிகளை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி மீனாட்சிசுந்தரத்தின் உறவினர்கள், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனை, கீழப்பாலம் ஆகிய இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குழந்தைகள் கொலை செய்யப் பட்ட இந்த துயர சம்பவத்தால் மன்னார்குடி நகரமே சோகத்தில் ஆழ்ந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்