தேனி மஞ்சளாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு: 5259 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்

By என்.கணேஷ்ராஜ்

தேனி

தேனி மஞ்சளாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக இன்று முதல் 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து நீர் திறக்கப்பட்டது. ஆட்சியர் பல்லவி பல்தேவ் திறந்துவைக்க உடன் பொதுப்பணித் துறை அதிகாரிகள் இருந்தனர்.

இதன் மூலம், தேனி மாவட்டத்தில் 3148 ஏக்கர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் 2111 ஏக்கர் ஆக மொத்தம் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மஞ்சளாறு நீர்த்தேக்கத்திலிருந்து முதல் போக சாகுபடிக்கு பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு நவம்பர் 2, 2019 முதல் டிசம்பர் 15, 2019 வரை வினாடிக்கு 60 கன அடி வீதம் 44 நாட்களுக்கும், 16.12.209 முதல் 31.01.2020 வரை வினாடிக்கு 50 கன அடி வீதம் 47 நாட்களுக்கும், 01.02.2020 முதல் 15.03.2020 வரை வினாடிக்கு 45 கன அடி வீதம் 44 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

புதிய ஆயக்காட்டுப் பகுதிகளுக்கு 2.11.2019 முதல் 30.11.2019 வரை வினாடிக்கு 40 கன அடி வீதம் 29 நாட்களுக்கும், 01.12.2019 முதல் 29.02.2020 வரை வினாடிக்கு 30 கன அடி வீதம் 91 நாட்களுக்கும், 01.03.2020 முதல் 15.03.2020 வரை வினாடிக்கு 20 கன அடி வீதம் 15 நாட்களுக்கும், 01.03.2020 முதல் 15.03.2020 வரை வினாடிக்கு 20 கன அடி வீதம் 15 நாட்களுக்கும் ஆக மொத்தம் 135 நாட்களுக்கு முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்துக்கு உட்பட்ட தேவதானப்பட்டி, கெங்குவார்ப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி ஆகிய ஊர்களும். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட கணவாய்ப்பட்டி, வத்தலக்குண்டு, குன்னுவராயன்கோட்டை, சிவஞானபுரம் ஆகிய கிராமங்களும் பயன்பெறும்.

விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூலைப் பெறும் பொருட்டு பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு ஒத்துழைக்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்