ஆசிரியர் பயிற்சித் தேர்வில் 2.4 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி 

By செய்திப்பிரிவு

சென்னை

தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத்தேர்வு எழுதிய 4,503 மாணவர்களில் 105 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக ஆரம்பப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்த தொடக்கக்கல்வி பட்டயப் பயிற்சி (2 ஆண்டு) முடித்து தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் 12 அரசு, 29 அரசு நிதியுதவி மற்றும் 247 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் 2019-ம் ஆண்டுக் கான தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு கடந்த ஜூன் மாதம் அரசு தேர்வுத்துறையால் நடத்தப் பட்டது. இதற்கான தேர்வு முடிவு கள் நேற்று முன்தினம் வெளி யானது. அதில் மிகவும் குறைந்தளவில் 2.4 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற் றுள்ளனர்.

அதன்படி தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வை முதலாமாண்டு மாணவர்கள் 3,000 பேர் எழுதினர். அதில் 75 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல், 2-ம் ஆண்டு மாணவர்கள் 4,503 பேர் தேர்வெழுதினர்.

அதில் 105 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயச் சான்று பெற தகுதி பெற்றுள்ளனர். விடைத்தாள் திருத்தம் உட்பட தேர்வு முறைகளில் பின்பற்றப் படும் சமீபத்திய கடும் கட்டுப் பாடுகளால் தேர்ச்சி விகிதம் குறைவதாக கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்